காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23-12-2019 -T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
23-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 785

அதிகாரம் : நட்பு

 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 
 நட்பாங் கிழமை தரும்.

பொருள்:

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

விருப்பத்துடன் படின்றால் கற்பனைத்திறன் வளரும். கற்பனைத்திறன் வளர்ந்தால் கருத்து மிளிரும். கருத்து மிளிர்ந்தால் அறிவு ஒளிரும். அறிவு ஒளிர்ந்தால் நாடு முன்னேறும், நாடு முன்னேறினால்  அனைவரின் வாழ்வும் செழிக்கும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
Blood is thicker than water
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Ellipse - நீள்வட்டம்
2. Emblem - அடையாளம்,சின்னம்
3. Enmity -  பகைமை
4. Envelope - கடித உறை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.கப்பலின் வேகத்தை அளக்கும் கருவி எது ?

 நாட்

2. இடி தாங்கியைக் கண்டுபிடித்தவர் யார் ?

 பெஞ்சமின் பிராங்க்ளின்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான். அவன் யார் ?

 கரும்பு

2. பிடுங்கலாம் , நடமுடியாது, அது என்ன ?

 தலைமுடி

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. There were books lying about on the floor.
2. There is a mirror above the wash basin.
3. He was injured in a bus accident.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

அன்னாசிப்பழம் 

🍍 எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது.

🍍 இது பிரமிலசே இனத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.

🍍அன்னாசி என்ற பெயர் போர்த்துக்கீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது.

🍍தற்போது அன்னாசி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

மூதாட்டிக்கு அளித்த ஒரே வரம்

ஒரு ஊரில் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளுக்கு சேவை செய்த மூதாட்டி ஒருத்தியின் கனவில் பெருமாள் தோன்றினார். பாட்டி உன் இளமை முதலே நீ என் மீது கொண்ட பக்தியை மெச்சினேன். விரும்பிய வரம் தருகிறேன், கேள்! என்றார். உடல் தளர்ந்திருந்தாலும் பாட்டிக்கு மனம் இளமையாகவே இருந்தது. 

மூதாட்டி, ஏழாவது மாடியில் நின்று கொண்டு என் எள்ளுப்பேரன் தங்கக் கிண்ணியில் பால் சாதம் சாப்பிடுவதை என் கண்களால் காண வேண்டும், என்றாள். பெருமாளும் பலே பாட்டி, பலே என்று மகிழ்ந்து வரம் கொடுத்து விட்டார். காரணம் பாட்டி, தன்னுடைய எல்லா விதமான ஆசைகளையும் ஒரேயடியாகச் சொல்லி விட்டது தான். 

நீ எள்ளுப்பேரன் பிறக்கும் வரை பூமியில் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புகிறாய். அதுவும் மாடியில் படியேறிச் சென்று பார்க்கும் விதத்தில் உடலில் பலம் வேண்டும் என்கிறாய். ஏழுமாடி வீட்டுக்குச் சொந்தக்காரியாக வாழும் செல்வ வளமும் வேண்டும் என விருப்புகிறாய். எள்ளுப்பேரன் தங்கக் கிண்ணியில் பால்சாதம் சாப்பிடும் அளவுக்கு வீட்டில் சுபிட்சமும் நிலவ வேண்டும் என ஆசைப்படுகிறாய். 

கீழ் தளத்தில் நடப்பதை, ஏழாவது தளத்தில் நின்று பார்க்கும் விதத்தில் கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டும் என விரும்புகிறாய்! இத்தனையையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டாயே! என்று பாராட்டி வரத்தையும் கொடுத்து விட்டார். குறைந்த வார்த்தைகளில் தெளிவாக பேசினாலும், எழுதினாலும் வெற்றி மேல் வெற்றி தான். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 25ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.

🔮43 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டின் முதல் பிரதமராக மார்ரீரோ க்ரூசை நியமனம்: கியூபா தேசிய சபையும் ஒப்புதல்.

🔮எல்லை தொடர்பான பிரச்சினைகளை அமைதியாக தீர்த்துக்கொள்ள இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன.

🔮இந்தியா உடனான 3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவிப்பு.

🔮தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி சென்னையில் வருகிற பிப்ரவரி மாதத்தில் நடக்கிறது.


🔮அதிரடியாக தடுப்பணை கட்டும் கர்நாடகம் 4லட்சம் ஏக்கர் பாசனம் பாழாகும் என்று பரிதவிக்கும் தென்பெண்ணை விவசாயிகள்.

HEADLINES

🔮India vs West Indies: Rohit Sharma breaks Sanath Jayasuriya's 22-year-old record.

🔮Anna  University will not be controlled by the Central government even if it is awarded the Institute of Eminence (IoE) status.

🔮Unpleasant start to Olive Ridleys nesting season, five dead turtles washed ashore in Chennai.


🔮Pakistan violates ceasefire along LoC in Jammu and Kashmir’s Rajouri, Poonch

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20-12-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
20-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்-341

அதிகாரம் : துறவு

 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
 அதனின் அதனின் இலன்.

பொருள்:

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

பிறருக்காக சிறிதளவு நன்மை செய்தாலும் பலமான சிங்கத்திற்கு நிகரான ஆற்றல் பெறுவீர்கள்.
 - சுவாமி விவேகானந்தர்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவதே மேல்.
Better wear out than rust out.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Eal - ஆங்கில பிரபு
2. Earthquake - பூகம்பம்
3. Echo - எதிரொலி
4. Edge - விளிம்பு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு எது?

 இலங்கை

2. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யார் ?

 கிரண்பேடி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. தலையை சீவினால் தாளில் நடப்பான், அவன் யார் ?

 பென்சில்

2. கன்று நிற்க கயிறு மேயுது, அது என்ன ?

 பூசணிக் கொடி

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. A rainbow has seven colours.
2. Somu told sundari about his magic.
3. My sisters dress is pink in colour.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

ஆப்பிள் 

🍎 ஆப்பிள் வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும்.

🍎 ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும்.

🍎 மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது.

🍎 தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப்பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

🍎தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், மதுரை மாவட்டம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு பகுதியில் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகின்றன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அங்குலனின் பக்தி

அங்குலன் என்னும் வேடன் எதிரில் எந்த ஒரு விலங்கும் நடமாட முடியாது. சாதுவான பிராணி என்றாலும் கொன்று விடுவான். அப்படிப்பட்ட அங்குலனுக்கும் இறைவன் அருள்புரிந்தார். ஒரு நாள் அங்குலன் தன் வழக்கம்போல் வலைகளை விரித்து விட்டுக் காத்திருந்தான். ஆனால், அன்று ஒரு சின்னஞ்சிறிய அணில் கூட அகப்படவில்லை. பசியோடு பகல்பொழுது போனது காலை முதல் எதுவும் கிடைக்க வில்லை. 

வெறுங்கையோடு வீட்டிற்குப் போனால் மனைவி-பிள்ளைகளின் முகத்தில் எப்படி விழிப்பேன் என நினைத்தவன் இரவு இங்கேயே ஏதாவது ஒரு மரத்தின் மீது தங்கி, காலையில் போக வேண்டியது தான் என்று நினைத்தான். பின் ஒரு மரத்தின் மேலேறி உட்கார்ந்தான். அது வில்வமரம் என்பது அவனுக்குத் தெரியாது. அந்த மரத்தின் அருகில் ஒரு குளம் இருந்தது. 

இரவு நேரத்தில் ஏதாவது விலங்குகள் குளத்தில் நீர் குடிக்க வரும். அடித்து விடலாம் என்ற எண்ணத்தில் தோளில் இருந்த வில்லை எடுத்த அங்குலன் குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். குளம் தெரியாததாள். மரத்தின் உச்சிக்கு சென்று நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக முன்னால் கிளைகளில் இருந்த வில்வ இலைகளை எல்லாம் உதிர்த்தான். அவை அனைத்தும் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. 

அதன் பிறகு குளம் தெளிவாகத் தெரிந்தது. நேரம் போனதே தவிர, ஒரு விலங்கு கூட வரவில்லை. ஆனால், அங்குலனுக்குத் தூக்கம் வந்துவிட்டது. இப்போது பார்த்துத் தூக்கம் வருகிறதே! தூங்கிக் கீழே விழுந்து விட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு உணவாகி விடுவேனே. தூக்கத்தை விரட்ட என்ன செய்யலாம். என்று எண்ணிய அங்குலன், மரத்தில் இருந்த வில்வ இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாகக் கீழே போட்டான். அவையெல்லாம் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. 

பொழுது புலர்ந்தது. ஒரு விலங்கு கூட அகப்பட வில்லை. பகல் முழுவதும் உண்ணாமலும், அதனால் இரவு தூங்காமலும் வீடு திரும்பினான். அந்த நாள் சிவராத்திரி என அறியாமலேயே அங்குலன் செய்த செயல்களை, சிவன், சிவராத்திரி வழிபாடாக ஏற்றுக் கொண்டு அவனுக்கு அருள் புரிந்ததார். அதன் பலனாக சிவகணங்களின் ஒருவனாக ஆகும் பேறு அங்குலனுக்குக் கிடைத்தது. தெரியாமல் செய்தாலும் கூட, நல்ல செயல்களுக்கான நன்மை கிடைத்தே தீரும். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

🔮அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

🔮ஃபோர்ப்ஸ் இதழினின் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் விராட் கோலி:

🔮சென்னை மாநகராட்சி சார்பில் வாகன கழிவுகளில் இருந்து உலோகச் சிற்பங்கள் செய்யும் பணி தீவிரம்.

🔮தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர் பதவி இடங்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.

HEADLINES
🔮CAA protests: Keep educational institutions out of politics, urges HRD minister

🔮Bengaluru highest paying city, IT highest paying industry in India: Report.

🔮TN scientist heading Chandrayaan 3 mission known for his technical acumen.

🔮IPL 2020 auction : Youngsters become crorepatis, Hetmyer goes for Rs 7.75 crore

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19-12-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
19-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 432

அதிகாரம் : குற்றங்கடிதல்

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா 
 உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள்:

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

குழந்தைகளின் புன்சிரிப்பைத் தொடர்ந்து தக்க வைக்கக் கூடிய கற்பனை வளமிக்க அறிவார்ந்த கல்வியை நாம் உருவாக்க வேண்டும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
A cracked bell never sound well
உடைந்த சங்கு பரியாது
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Detect - உளவறி
2. Devil - பேய், தீய ஆவி
3. Dew -  பனித்துளி
4. Diagram - விளக்க வரை படம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. கொலம்பியா விண்கலத்தில் இறந்த இந்தியப் பெண் விஞ்ஞானி யார் ?

 கல்பனா சாவ்லா

2. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?

 சென்னிமலை

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும், அது என்ன ?

 ஆமை

2. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை, அது என்ன ?

 வழுக்கை

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The car is near the tree.
2. Your hat looks very nice.
3. Open the door, please.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

சப்போட்டா

🍋 சப்போட்டா வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

🍋 மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

🍋 கடல்வழியே இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் மூலம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

🍋தற்போது உலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா பழம் அதிக அளவு உற்பத்தி ஆகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

முல்லா ஏன் அழுதார்

ஒரு நாள் முல்லா தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவருடைய நண்பர் முல்லாவிடம் ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.

அதற்கு முல்லா சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பாவும் இருபது லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனது அத்தை சென்ற வாரம் எனக்கு 30 லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு அவரும் இறந்துவிட்டார். எனது தாத்தா மூன்று நாட்களுக்கு முன் 50 லட்சம் ரூபாயை இறக்கும் முன் எனக்கு எழுதி வைத்துவிட்டார் என்று கூறிவிட்டு, மேலும் முல்லா அழுகையை நிறுத்தாமல் அழுதுக்கொண்டே இருந்தார்.

அதற்கு நண்பர் உனக்கு கிடைத்த இவ்வளவு ரூபாய்களை வைத்து சந்தோஷப்படாமல் ஏனப்பா அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு முல்லா, நண்பரிடம் இனிமேல் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போவதற்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்பதை நினைத்து அழுதுகிட்டு இருக்கேன் என்றார். முல்லா சொன்னதை கேட்ட நண்பர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

நீதி :
பிறர் நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮நியுசிலாந்து ரவுல் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

🔮ரபேல் போர் விமானம் இருப்பதால் இனி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்குள் செல்ல தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே அவற்றை அழித்து விடலாம் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

🔮தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔮வெஸ்ட் இண்டீஸ் உடனான இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்திய அணி 387 ரன்கள் குவிப்பு.

🔮உலகளவில் அறிவியல் கட்டுரைகளை அதிகளவு வெளியிடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்டது.

HEADLINES
🔮Situation along LoC can escalate any time: Army Chief General Bipin Rawat.

🔮Five bowlers who could garner crores in the IPL auction.

🔮Donald Trump on brink of impeachment as House readies historic vote.

🔮Tamil writer Cho Dharman wins Sahitya Akademi award for his novel ‘Sool’

🔮India vs West Indies 2nd ODI Live Cricket Score Updates: Kuldeep Yadav gets hat-trick.

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18-12-2019 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
18-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண் - 735

அதிகாரம் : நாடு

 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 
 கொல்குறும்பும் இல்லத நாடு.

பொருள்: 

பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஆசை என்னும் சங்கிலி இருக்கும் வரை பிறவி என்னும் சங்கிலியும் மனிதனைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
 - சுவாமி விவேகானந்தர்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
A constant guest is never welcome
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Dunce -  மடையன், முட்டாள்
2. Dung - சாணம்
3. Dwarf - குள்ளன், குட்டை 
4. Dwelling - வசிப்பிடம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. முதலில் உலகப்படத்தை வரைந்தவர் யார் ?

 இராடோஸ்தானிஸ்

2. செயற்கை மழையைக் கண்டுபிடித்தவர் யார் ?

 இர்வின் லாங்மூர்


📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. நீள வால் குதிரையின் வால், ஓட ஓடக் குறையும் , அது என்ன?

 தையல் ஊசியும், நூலும்

2. கண்ணால் பார்க்கலாம், கையால் பிடிக்க முடியாது, அது என்ன ?

 நிழல்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. I am tired of my work
2. The boy began to cry
3. I'm ready for breakfast


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

மஞ்சள்

🍠 மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும்.

🍠 தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து, மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.

🍠 இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாகும். இதனை இந்துக்கள் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

🍠 மஞ்சள் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.

🍠இது முதலில் வண்ணச் சாயம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது.

🍠தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் அதிகளவில் விளைகிறது. இதனால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்ற பெயரும் உண்டு.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

பொறாமை கொண்ட இளைஞன்

துறவி ஒருவர் ஆஞ்சநேயர் மீது பக்தியுடன் வாழ்ந்து வந்தார். தினமும் பக்தர்களுக்கு ராமாயணக் கதை சொல்வது அவரது வழக்கம். அவர் மீது பொறாமை கொண்ட இளைஞன் ஒருவன் ஊருக்குள் சென்று துறவியின் ஒழுக்கத்தைப் பற்றி அவதூறான விஷயங்களைப் பரப்பினான். சிலர் இதை நம்பவும் செய்தனர். காலப்போக்கில், அவனுக்கு பல கஷ்டங்கள் வந்தன. துறவியைப் பற்றி அவதூறு பரப்பியதால் தான், இவ்வாறு தனக்கு நிகழ்கிறது என உறுதியாக நம்பியவன். துறவியிடம் சென்று மன்னிக்குமாறு வேண்டினான். துறவி இளைஞனிடம், நான் சொல்வதைக கேள். 

வீட்டுக்குச் சென்று நீ ஒரு தலையணையை எடு அதைக் கிழித்து நாலாபுறமும் பறக்கவிடு. பிறகு என்னிடம் வா! என்று அனுப்பினார். துறவி சொன்னதை அப்படியே செய்து விட்டு ஓடி வந்தான் இளைஞன். பஞ்சைக் காற்றில் பறக்க விட்டேன் சுவாமி அடுத்து வேறென்ன நான் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்றான் இளைஞன். பறக்க விட்ட பஞ்சு முழுவதையும் ஒன்றாக்கி கொண்டு வா என்றார். இதுகேட்டு திகைத்து நின்ற இளைஞனிடம், தம்பி காற்றில் பறந்த பஞ்சைப் போலவே, யாரையும் பழி சொல்வது எளிதான விஷயம். 

ஆனால், அதை மீண்டும் சரி செய்து நல்லெண்ணத்தை உருவாக்குவது என்பது முடியாத காரியம். எப்போது செய்ததை எண்ணி வருந்தினாயோ அப்போதே மன்னிக்கப்பட்டு விட்டாய். இனி நல்லவனாகத் திருந்தி வாழ், என்று சொல்லி அனுப்பி வைத்தார். 

நீதி :

யார் மீதும் பழி சொல்வது எளிதான விஷயம், அதைப் போக்குவது கடினம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள் 72 வருடங்களில் திட்டமிட்ட முறையில் வெளியேற்றம்; இந்திய அரசு குற்றச்சாட்டு.

🔮நிலம் மற்றும் காற்றில் இருந்து பறந்து சென்று இலக்கை அடையும் இரு பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.

🔮டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார்.

🔮தென்னாப்பிரிக்காவில் உள்ளதுபோல் மாநிலத்தில் 3 தலைநகர் அமைக்க அவசியம் உள்ளது: ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு.

🔮சென்னை ஐஐடியில் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி : உபகரணங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு.

🔮ஐ.நா., : ஐ.நா.,சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என சீனா  கொண்டு வர இருந்த கோரிக்கையை வாபஸ் பெற்றது.

HEADLINES
🔮Hindu political party registered in South Africa, claims to be voice of minority.

🔮Pervez Musharraf sentenced to death by Pakistan court for high treason.

🔮Reservation counters witness heavy rush much ahead of Sankranti.

🔮Marnus Labuschagne picked in Australia ODI squad for India tour.

🔮After a brief dip, onion prices surge again to Rs 100-120 per kg in Chennai.

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...