காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06-12-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
06-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 417

அதிகாரம் : கேள்வி
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 
 தீண்டிய கேள்வி யவர்.

மு.வ உரை:

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

கருணாநிதி  உரை:

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நாம் பல்லாண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்வது தோற்கடிக்கப்பட்ட பாதையில் பயணிப்பதற்குச் சமம்.
- அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
Bare words buy no bar ley
வெறுங்கை முழம் போடுமா?
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Bluff - மிரட்டுதல்
2. Bodyguard - மெய்க்காப்பாளன்.
3. Bonus - மிகை ஊதியம்
4. Booby - முட்டாள்/ மூடன்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. நீரின் நிறம் என்ன ?

 நிறம் இல்லை

2. ரப்பர் பாலைத் தரும் தாவரம் எது ?

 கோல்டன் ராடு

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. தாழ்ப்பாள் இல்லாத கதவு தானாக மூடி திறக்கும் கதவு. அது என்ன ?

 கண் இமை

2. சுற்றும் போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன ?

 மின்விசிறி

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. I drew a picture in my book.
2. My parents liked it very much.
3. Our hen had five chicks.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

துவரை

🍊 துவரை 3500ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதன் தாயகம் ஆசியாவாகும். 

🍊 துவரை இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது.

🍊 தமிழர் சமையலிலும், துவரம் பருப்பு முக்கிய உணவுப்பொருளாக
 உள்ளது.

🍊இப்பயிரானது தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும் , ஊடு பயிராகவும் பயிரிடப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

கற்றப் பாடம்

ஒரு நாள் காட்டில் உள்ள சிங்கம், நரி, கழுதை ஆகிய மூன்றும் சேர்ந்து வேட்டைக்குச் சென்றன. அன்று வேட்டையில் கிடைப்பதை சமமாகப் பிரித்துக் கொள்வது என்று மூன்றும் முடிவு செய்தன. வேட்டைக்கு செல்லும் வழியில் கொழுத்த கலைமான் ஒன்று அகப்பட்டது. அதனை சிங்கம் பங்கு போடச் சொல்லி கழுதைக்கு கட்டளை இட்டது. அக்கழுதையோ ஏற்கனவே மூவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கலைமானை மூன்று சமப்பங்காக கூறு போட்டது. சிங்கமோ, தனக்கு மரியாதைக் கொடுக்காமல் சமபங்கு போட்ட கழுதையின் மேல் கோபம் கொண்டு அதன் மீது பாய்ந்து கழுதையைக் கொன்றது. 

பிறகு உடன் இருந்த நரியை பங்கு போடச் சொல்லியது சிங்கம். சிறிய பங்கை தனக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்தையும் சிங்கத்திற்கே கொடுத்தது. அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சிங்கம் இவ்வளவு பெருந்தன்மையையும், மரியாதையையும் எங்கே கற்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த நரி, இறந்து கிடக்கும் கழுதையைச் சுட்டிக்காட்டி, இதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன் என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது. 

நீதி :
கெட்டவர்கள் நியாயத்திற்கு மதிப்பு அளிக்க மாட்டார்கள். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டதாக வரும் தகவலில் உண்மையில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


🔮இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🔮சென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔮சூரியனுக்கு அருகில் சென்றுள்ள நாசாவின் பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலம் சூரியக் காற்று குறித்த பல ஆச்சரிய விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளது.

🔮ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

🔮தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது. நேற்று ஒரேநாளில் 15 தங்கப்பதக்கம் வென்றது.

HEADLINES
🔮RBI keeps repo rate unchanged at 5.15%; reduces growth forecast to 5%.

🔮Fee hike in JNU done to meet high expenditure on maintenance of hostels: HRD minister Pokhriyal.

🔮This Karimnagar village banishes eve-teasers, bans booze for youth to ensure women's safety.

🔮Bihar-born sub-Lieutenant Shivangi becomes Navy's first woman pilot.

🔮Most victims of Sudan fire tragedy belonged to Tamil Nadu, Bihar: Indian Embassy

🔮Egypt, Turkey and Afghanistan come to the rescue as onion prices leave India in tears.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...