காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு


காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள்
16-03-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள்எண்- 476

அதிகாரம் : வலியறிதல்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் 

 உயிர்க்கிறுதி ஆகி விடும்

பொருள்:
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.

 - மகாத்மா காந்தி
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

இன்றைக்கு இலை அறுத்தவன், நாளைக்கு குலை அறுப்பான்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

 AQUATICS - நீர்வாழ்வன

1. Whit Fish - கிழங்கா மீன்
2. Walrus - கடல் குதிரை
3. Sword Fish - மகர மீன்
4. Shark - சுறா

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.மதுரை கொண்டான் என்ற சிறப்பு பெயர் யாருடையது ?

முதலாம் பராந்தகன்

2. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமண, சமய நினைவுச் சின்னங்கள் நிறைந்த பகுதி எது ?

 திருபருத்திக்குன்றம்

✡✡✡✡✡✡✡✡
Daily English
Simple sentences

1. The Peacock is our national bird.
2. The Lotus is our national flower.
3. The Tiger is our national animal
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

கோவக்காய்


பயன்கள்

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கோவைக்காய் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

கோவைக்காய் இலைகள் கண் பிரச்னைக்கும், கையில் ஏற்படும் சொறிக்கும், அரிப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.


கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

மகிழ்ச்சியின் எல்லை

முல்லாவின் வீட்டிற்கு அருகில் இருந்த செல்வந்தரிடம் ஏராளமான சொத்துக்கள் நிறைந்து இருந்தன. ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. முல்லா அவர்களே! நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க எனக்கு ஒரு யோசனை கூறுங்களே என்றார்.

ஓர் நாள் முல்லா செல்வந்தர் வீட்டிற்கு சென்றார். அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து கொண்டிருந்தார். நண்பரே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நான் முல்லா வந்திருக்கிறேன் என்றார்.

முல்லா உள்ளே வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாக பணப் பைகளைப் பெட்டியில் வைத்து பூட்டத் தொடங்கினான். அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று பணப் பெட்டிக்கு பக்கத்தில் விழுந்து விட்டதைப் பார்த்த முல்லா, உடனே பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஒடினார். முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஒடினார். செல்வந்தன் ஐயோ! என்னுடைய பணம், என்னுடைய பணம் என்று கூக்குரலிட்டுக்கொண்டே முல்லாவைப் பின் தொடர்ந்து ஒடினான். முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஒடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப் பெட்டியின் மீது போட்டார். அப்பா இப்பொழுது தான் எனக்கு உயிரே வந்தது என்றான் செல்வந்தன்.

முல்லா அவர்களே எதற்காக என் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினீர்கள். இந்தப் பணம் கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும் என்றார். நல்லவேளை பணம் மீண்டும் எனக்கு கிடைத்துவிட்டதால் உயிரும் ஆபத்தில்லை. மேலும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார். உம்மால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று என்னிடம் கூறினீர்கள் தானே, உமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவே பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் என்றார் முல்லா.

நீதி :


பணக்காரனுக்கு பணம் மட்டும் தான் சந்தோஷம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சீனாவில் உருவான கொரோனா அதன் தாக்கம் குறைந்துள்ளதாகவும் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

🔮கொரோனா வைரஸ் எதிரொலியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து ராணி 2ம் எலிசபெத் வெளியேறுகிறார்.

🔮சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மேற்கொள்ளும் ஆலோசனை கூட்டத்தில், மோடி உரை,

தயாராகுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள் என்பது எங்களுடைய வழிகாட்டி மந்திரம்;

🔮இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? இல்லையா? என்பதில் ஒரு முடிவுக்கு வர 3 வாரங்கள் காத்திருப்பது என்று அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு.

🔮பனை தொழிலாளருடன் துணை நிற்போம்; பனை தொழிலாளர் வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை...அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி.


🔮கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் ரூ.74 கோடி வழங்கப்படும்; சார்க் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு.

HEADLINES

🔮Coronavirus :  Global death toll crosses 6,000.

🔮Nirbhaya case: Tihar asks hangman to report three days ahead of execution.

🔮Coronavirus: Avoid travel out of Tamil Nadu for 15 days, says CM Palaniswami.

🔮FOOTBALL: ISL | ATK has the final laugh, picks up a record third title.


🔮COVID-19: Bring your blankets, railways tells passengers.

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 13-03-2020 - T. தென்னரசு


காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள்
13-03-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள்எண்- 724

அதிகாரம் : அவையஞ்சாமை

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற 

 மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்:

அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மனிதனுடைய திறமை பெரியதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கின்றது.

 - கவிஞர் கண்ணதாசன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

 உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

AQUATICS - நீர்வாழ்வன

1. Cockle - மட்டி
2. Eel - விலாங்கு மீன்
3. Gar Fish - கோலா மீன்
4. Lobster - கடல் நண்டு
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தேனி  மாவட்டத்தின் முக்கிய ஆறுகள் யாவை ?

பெரியாறு, மஞ்சளாறு, சண்முகாநதி

2. சிவகங்கையில் உள்ள பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன ?

 அழகப்பா பல்கலைகழகம்

✡✡✡✡✡✡✡✡
Daily English

BRITISH ENGLISH - AMERICAN ENGLISH

1. ILL - SICK
2. JAM - JELLY
3. LAVATORY - TOILET
4. LORRY - TRUCK
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

வெண்டைக்காய்


பயன்கள்

🌽 கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக் காயில் அதிகமாக உள்ளது. கருவில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும், குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த போலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

🌽 முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

🌽 பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராம் அளவு சாப்பிட்டுவர வேண்டும்.


🌽 பிஞ்சு வெண்டைக்காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி , சிறு சிறு துண்டுகளாக வெட்டி , நாட்டு சர்க்கரை சேர்த்து ,பிசைந்து ஒரு மணி நேரம் வைத்து தினமும் 6 முறை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி அடையும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

கடவுளின் அனுமதி

ஒரு நாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்கு சென்று கொண்டிருக்கும்பொழுது வழியில் ஒரு முரடனிடம் மாட்டிக்கொண்டார். அந்த முரடன் முல்லாவைப் பார்த்து, நீ எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் அதிலிருந்து உமது சாமர்த்தியத்தால் தப்பி விடுவதாக மக்கள் அனைவரும் உன்னைப்பற்றி பேசிக்கொள்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இங்கே பார் முல்லா, இதோ இந்த உடைவாளால் உன் கழுத்தை இப்பொழுது நான் வெட்டப் போகிறேன். எங்கே உமது அறிவுச் சாதுரியத்தால் என்னிடம் இருந்து தப்பித்து செல் பார்க்கலாம் என்றான் முரடன். உடனே முல்லா திடீரென வானத்தைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்று முரடன் கேட்டான்.

அன்பரே, உன்னுடைய கைவாள் என் தலையைத் துண்டிப்பதற்கு முன்பு அதோ வானத்திலே பறந்து கொண்டிருக்கும் வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீ என் தலையை வெட்டி விடு என்றார். என்னது வானத்தில் தங்கப் பறவையா? என்று கேட்டுக் கொண்டே முரடன் ஆச்சரியத்துடன் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கலானான். அதுசமயம் முல்லா முரடனின் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து கொண்டார்.

நண்பரே, உன்னுடைய உயிர் இப்போ என் கையில் உள்ளது. நான் நினைத்தால் உன் தலையை வெட்டி வீழ்த்த முடியும் என்றார் முல்லா. முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர். முல்லாவிடம் மன்னிப்புக்கேட்டான்.

அன்பரே, கடவுள் அனுமதியில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள் என்று கூறி வாளை முரடனிடம் தந்துவிட்டு முல்லா பயணத்தைத் தொடர்ந்தார்.

நீதி :


ஒருவர் பிறப்பது மற்றும் இறப்பது இரண்டுமே இறைவன் கையில் உள்ளது.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இனி பெற்றோரின் பெயரும் இடம் பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

🔮தமிழகத்தில் என்.பி.ஆர்.கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

🔮இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔮கொரோனா எதிரொலியால் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

🔮தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் கால் பதித்த கொரோனா: 3 பேருக்கு கொரோனா அறிகுறி; ரத்தமாதிரிகள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைப்பு.


🔮அவசியமற்ற வெளிநாடு பயணங்கள், பெரிய அளவில் கூட்டம் கூடும் இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வே்ணடும் : பிரதமர் மோடி அறிவுரை.

🔮வேலூர் மாநகராட்சி எல்லைப்பகுதிகள் அளவீடு துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


🔮டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய வீரர்கள் 9 பேர் தகுதி.

HEADLINES

🔮Coronavirus : number of cases rises to 76, with Pune reporting one more.

🔮India’s current account deficit narrows to $1.4 billion in December quarter.

🔮Online tools for teachers and students to hold virtual classes during the COVID-19 pandemic.

🔮India vs SA 1st ODI  Rain washes out.

🔮FOOTBALL: Coronavirus: ISL final between ATK and Chennaiyin FC to be held in empty stadium.


🔮Delhi government declares coronavirus an epidemic, shuts schools, colleges and cinema halls.

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 12-03-2020 - T. தென்னரசு


காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள்
12-03-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள்எண்- 815

அதிகாரம் : தீ நட்பு

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 

 எய்தலின் எய்தாமை நன்று.

பொருள்:
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

எவர் எத்தகைய இனிமொழிகளை பேசிடினும் தம்பி, நீ கானம் பாடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும்.

 - அறிஞர் அண்ணா
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

உழுதவன்  கணக்குப்  பார்த்தால்  உழக்கேனும்  மிஞ்சாது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Cranium - மண்டை ஓடு
2. Colon - பெருங்குடல்
3. Cerebrum - பெரு மூளை
4. Cerebellum - சிறு மூளை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. கவிஞர் கண்ணதாசனின் மணிமண்டபம் எங்குள்ளது ?

 காரைக்குடி

2. திருமலை நாயக்கர் மஹால் எங்குள்ளது ?

 மதுரை

✡✡✡✡✡✡✡✡
Daily English
British English - American English
1. car - coach
2. cinema - movies
3. enquiry - inquiry
4. flat - apartment

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

முருங்கைக்காய்


பயன்கள்

🌽 ஞாபக மறதியைப் போக்கி, நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

🌽 முற்றிய முருங்கை விதைகளை காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி, பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமாகும்.

🌽 முருங்கை இலை காம்புகளை தனியாக காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.

🌽 முருங்கை வேரை பாலுடன் சேர்த்து அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும்.


🌽 நரம்பு தளர்ச்சிக்கு முருங்கை பூ ஒரு சிறந்த மருந்து.

🌽முருங்கைக்காய் சூப் எடுத்துக் கொண்டால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் குறைக்க உதவுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அழகிய ரோஜா செடி

அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.

அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காதா என்று கேட்டது. 


சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

🔮அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் 13 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

🔮பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 31-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

🔮32 அணிகள் பங்கேற்கும் மாநில கபடி போட்டி, சென்னையில் 11-03-2020 அன்று தொடங்கியது.

🔮எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியம் இல்லை: சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு 3% வட்டி....அதிரடி அறிவிப்பு.

🔮விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது: முதல்வர் பழனிசாமி உறுதி.


🔮மும்பையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி.

HEADLINES

🔮Coronavirus: Karnataka man’s death not confirmed as due to COVID-19, say officials.

🔮Heat is not a deterrent for transmission’: Your COVID-19 queries answered.

🔮State Bank of India cuts lending, deposit rates.


🔮Manish Kaushik wins intense box-off to make Olympic cut as Indian boxing records best qualifying show.

🔮Russian pranksters led Prince Harry to believe he spoke with Greta Thunberg: Report.

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 11-03-2020 - T.தென்னரசு


காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள்
11-03-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள்எண்696

அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில 

 வேண்டுப வேட்பச் சொலல்.

பொருள்:


ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

அழும் போது தனிமையில் அழு, 
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி, 
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், 
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

 - கண்ணதாசன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Sounds of Things - பொருள்களின் ஒலிகள்
1. Wave - ripple
2. Trains - rumble
3. Leaves - rustle
4. Watches - tick
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. அறிவியலுக்காக முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார் ?

 சர்.சி.வி.இராமன்

2. திருநெல்வேலி மாவட்டத்தில் கோரைப் பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர் எது ?

 பத்தமடை

✡✡✡✡✡✡✡✡
Daily English

BRITISH ENGLISH AND AMERICAN ENGLISH

1. biscuit - cookie
2. engine - motor
3. cotton - thread
4. cupboard - closet
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

சோளம்


சோளம் என்பது புல்வகையைச்  சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுள் சில  தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. 

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.


இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உண்டு.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்துக்கொண்டும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்திக் கொண்டும் மக்களுக்கு தொந்தரவுக் கொடுத்துக் கொண்டிருந்தது. இது மன்னருக்கு தெரிந்தும் மன்னர் கண்டு கொள்ளவில்லை.

இதனால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்று முல்லாவிடம் மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு முல்லா, மக்களிடம் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லா தான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து கஷ்டப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டுவிட்டனர். இத்தகவல் அறிந்த மன்னர் முல்லாவை வர வழைத்து உமக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னுடைய யானையைக் கட்டிப் போட்டிருப்பீர் என்று முல்லாவிடம் கேட்டார்.

மன்னர் பெருமானே! தங்களது யானை தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கச் சொல்லி எங்கள் ஊர் மக்களிடம் கேட்டது. நாங்கள் பெண் யானை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகத் தான் யானையைக் கட்டி வைத்திருந்தேன் என்றார்.

மன்னர், யானையாவது தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது? யாரிடம் நீ விளையாடுகிறாய்? என்று கேட்டார். மன்னர் பெருமானே! வேண்டுமானால் தாங்களே நேரில்வந்து தங்களின் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது பொய் என்றால் தாங்கள் கொடுக்கும் தண்டனை ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.

மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார். வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும், பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னர், தனது யானையால் தான் இந்த பேரழிவு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.

மன்னர் யானையினால் நடந்த சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். பிறகு அந்த யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடச் சொல்லி உத்திரவிட்டார். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முல்லாவுக்கு மனதார நன்றி தெரிவித்தார்கள். மன்னரும் முல்லாவின் அறிவைப் பாராட்டினார்.

நீதி :

நம்மால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பிற்கு தக்க சன்மானம் நிச்சயம் கொடுக்க வேண்டும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் பறக்கும் கார் குஜராத்தில் உருவாக உள்ளது.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைத்திருந்த ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

🔮இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

🔮பவுர்ணமியையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நிலவின் வெளிச்சத்தில் கடற்கரை கோவிலை கண்டு ரசித்தனர்.

🔮ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பன்ஹால், வீராங்கனை மேரிகோம் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

🔮3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்தது.


🔮கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினி, நுண்மக்கொல்லி திரவங்கள் தெளித்து, 3,400 அரசுப் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்.

HEADLINES

🔮Coronavirus,  Three more test positive in Pune, says official.

🔮Coronavirus | IAF C-17 returns from Iran with 58 Indians.

🔮OMCs cut petrol and diesel prices.

🔮Coronavirus: Theatres in Kerala to be shut down until March 16, film releases postponed.

🔮Indian mountaineer Bhawna Dehariya scales Australia’s highest mountain peak.

🔮Chicken sales decline by 35 per cent as government battles speculation on coronavirus.


🔮Olympic-bound Vikas enters final of Asian Qualifiers; Amit, Lovlina end with bronze medals.

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...