காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
13-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்-1149
அதிகாரம் :அலரறிவுறுத்தல்
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
மு.வ உரை:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
கருணாநிதி உரை:
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
சாலமன் பாப்பையா உரை:
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
இந்த உலகம் பெரிய பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.
- சுவாமி விவேகானந்தர்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
Bitter is patience but sweet is its
fruit
பொறுமை கசப்பானது அதன்
பலன் இனிப்பு
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. Cyclone - புயல்
2. Curse - சபதம் /சாபம்
3. Curriculum - பாடத்திட்டம்
4. Dawn - விடியற் பொழுது
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்குவதால் சோப்பு கிடைக்கிறது?
கொழுப்பு
2.தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு காரணமான பொருள் எது ?
கரோட்டினாய்டுகள்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. தலை இல்லாதவன் தலையை சுமப்பான், அவன் யார் ?
தலையணை
2. அடி மலர்ந்து நுனி மலராத பூ என்ன பூ?
வாழைப்பூ
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
2. My family is a big family
3. We should save energy
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
கேரட்
🍠 கேரட் ஆரஞ்சு நிறத்தில், நீளமான கூம்பு வடிவில், கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும்.
🍠 கேரட் முதலில் ஆப்கானிஸ்த்தான் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.
🍠 குளிர் பிரதேசப்பகுதிகளின் வெப்பநிலை 15 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் போது கேரட் நல்ல ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
🍠தமிழ்நாட்டில் கேரட் பயிரிடுவதற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்கள் மிகவும் ஏற்றவை.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
நன்றி கொன்ற ஓநாய்
ஒரு நாள் அடர்ந்த காட்டில் ஓநாய் வாழ்ந்து வந்தது. அதற்கு வசமான மாமிச வேட்டை கிடைத்தது. ஆவலுடன் வேக வேகமாக இரையைத் தின்றது. அப்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக் கொண்டது. வலி பொறுக்க முடியாமல் ஊளையிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியது. அப்போது ஒரு கொக்கு எதிரே வந்தது. அதனிடம் சென்ற ஓநாய் தனது தொண்டையில் மாட்டிக்கொண்ட எலும்பை எடுத்தால் தன்னிடம் உள்ள ஏராளமான பொன்னையும் பொருளையும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, உதவும்படி மிகவும் கெஞ்சியது.
ஓநாயின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கொக்கு உதவ முன் வந்தது. தனது நீண்ட அலகை ஓநாயின் வாய்க்குள் விட்டு எலும்பை எடுத்தது. சொன்னபடி பரிசு தரும்படி கொக்கு கேட்டது. பரிசா! உனக்கு... நான் தருவதா? என்று ஏளனமாகச் சிரித்தது ஓநாய். மேலும் உன் கழுத்தைக் கடித்துக் கொல்லாமல் உயிருடன் உன்னை விடுவதே பெரிது. மரியாதையாக இந்த இடத்தை விட்டு ஓடி விடு என்று விரட்டியடித்தது. நன்றியில்லாத ஓநாய்க்கு உதவியது பாவம் என்று எண்ணிக்கொண்டே கொக்கு தன் வழியே சென்றது.
நீதி :
ஆபத்தில் உதவியவனை அலட்சியப் படுத்தக்கூடாது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் 'டைம்' பத்திரிகை தேர்வு.
🔮என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என பிரபல தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கூறி உள்ளார்.
🔮தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மைய இயக்குனர் பேட்டி.
🔮தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்.
🔮நான் தமிழரின் பிள்ளை என லண்டனை சேர்ந்த பெரிய கோடீஸ்வரரும், தொழிலதிபருமான ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.
🔮பரோடா அணிக்கு 534 ரன் இலக்கு : இரட்டை சதம் அடித்தார் பிரித்வி ஷா.
🔮டிச.14-ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
HEADLINES
🔮New Zealand police plan to recover bodies from volcanic island on December 13
🔮Lotus on passports part of security feature, other national symbols to be used on rotation: MEA.
🔮HRD Minister assures BHU professor Firoz Khan will continue to teach in Sanskrit department.
🔮NASA scientists develop map showing presence of water ice on Mars.
🔮Will continue to boycott Indian ministers: Pakistan Foreign Office.
No comments:
Post a Comment