காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09-12-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
09-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 418

அதிகாரம் : கேள்வி

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
 தோட்கப் படாத செவி.

மு.வ உரை:

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

கருணாநிதி  உரை:

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தொழில்நுட்பக் கல்வியும், நல்லொழுக்க பாடமும் வாரத்திற்கு குறைந்த பட்சம் ஒருமணி நேரமாவது கற்றுத் தர வேண்டும். அப்போது தான் அவர்களின் இக்கட்டான சூழ்நிலையில் அவை அவர்களுக்கு உதவும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
Be friendly but not familiar
அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Bouquet - மலர்கொத்து
2. Breadth - அகலம்
3. Bride - மணமகள்
4. Brief - சுருக்கம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?

 மீத்தேன்

2. குஜராத்தின் புகழ்பெற்ற நடனம் எது ?

 தண்டியா

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது - அது என்ன?

 உளுந்து

2. உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன் - அவன் யார் ?

 எறும்பு

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. I played with my friend.
2. We sat inside and sang songs.
3. I wake up in the morning.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

தட்டப்பயிறு

🍊 தட்டப்பயறு ஒரு கொடிவகை தாவரமாகும்.

🍊 தட்டப்பயிறு அல்லது காராமணி என்றழைக்கப்படும் பயறு வகை, கிராமங்களில் மட்டுமல்லாமல் உலகெங்கும் பரவலாகப் பயிரிடப்படும், அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பயிறு வகை ஆகும். 

🍊 ஆப்பிரிக்காவில் உள்ள சவானா காடுகளில் வளர்ந்து, உணவாகப் பயன் தரும் முக்கியப் பயறு வகை ஆகும். மேற்கு ஆப்பிரிக்காவில் தான் முதலில் பயிரிடப்பட்டது.

🍊தமிழர் சமையலிலும், தட்டப்பயிறு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

சேவலும் இரத்தினக்கல்லும்

ஒரு சேவல் தனக்குத் தேவையான உணவை குப்பையைக் கிளறித் தேடிக் கொண்டிருந்தது. அப்போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது. அதனை பார்த்த சேவலின் குஞ்சு ஒன்று சேவலின் அருகே வந்து ஆவலுடன் அந்தக் கல்லை திருப்பி போட்டது. உடனே சேவல் வருத்தமாக இந்தக் கல் எனக்கு கிடைத்ததனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது. அதுவே ஒரு இரத்தின வியாபாரியின் கைக்கு கிடைத்திருந்தால் இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று அவனுக்கு தெரிந்திருக்கும். எனக்கு இந்தக் கல் கிடைத்ததைக் காட்டிலும் இந்த குப்பையிலிருந்து ஒரு தானியம் கிடைத்திருந்தால் அதுவே எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாதப் பொருள் என்று கூறியது சேவல். 

நீதி :
எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் சிறப்பு. 
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சந்திரயான்-3 திட்டத்திற்காக மேலும் ரூ.75 கோடி வழங்க மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது.

🔮தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 200 பதக்கங்களுக்கு மேல் வென்று குவித்துள்ளது.

🔮டெல்லியில் இன்று 43 பேர் கொல்லப்பட்ட பயங்கர தீ விபத்தில் துணிச்சலாக போராடி 11 பேரின் உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு படை வீரருக்கு பாராட்டுமழை பொழிந்து வருகிறது.

🔮ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த சிறுமி பேஸ்புக் உதவியால் 12 வருடங்களுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைய உள்ளார்.


🔮விண்வெளித்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது: மயில்சாமி அண்ணாதுரை.

🔮சென்னைபல்லாவரத்தில் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மின்வாரிய கேங்மேன் பதவிக்கான தேர்வு

HEADLINES

🔮Delhi inferno: Police arrest owner, manager of Anaj Mandi building where blaze claimed 43 lives

🔮27 students across 10 IITs ended lives in five years: RTI.

🔮Israeli high school students to launch self-made satellite from Sriharikota.


🔮Citizenship (Amendment) Bill to be tabled in LS for passage on December 9.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...