காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
12-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
மு.வ உரை:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.
கருணாநிதி உரை:
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.
சாலமன் பாப்பையா உரை:
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
மாணவரிடமும் மீண்டும் மீண்டும் கூறி மனதில்
ஆழப் பதியவைக்க முயலுகிறேன்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
A good
reputation is a fair estate
நற்குணமே சிறந்த சொத்து
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. Chimney - புகை போக்கி
2. Cheerful - சந்தோஷம்
3. Clown - கோமாளி
4. Coal - நிலக்கரி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை முதன் முதலில் எந்த மாநிலத்தில் வழங்கப்பட்டது?
திரிபுரா
2. சோடா பானம் தயாரிக்க பயன்படும் வாயு எது?
கார்பன் டை ஆக்சைடு
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார் ?
பாம்பு
2. வளைந்து நெளிந்து செல்பவள், வழியெங்கும் தாகம் தீர்ப்பாள், அது என்ன ?
ஆறு ( அல்லது) அருவி
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
1. I go to the market in the evening
2. I wash my clothes in the pond.
3. I clean my cycle with a hose
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
கருணைக்கிழங்கு
🍠 கருணைக்கிழங்குச் செடி ஒருமீட்டர் உயரம் வரை வளரும் ஒன்பது மாதப் பயிராகும்.
🍠 கருணைக்கிழங்கு ஈரப்பதமுள்ள மிதவெப்பநிலையில் நன்கு வளரும்.
🍠 இக்கிழங்கினை காரும் கருணைக்கிழங்கு எனவும் கூறுவர். இக்கிழங்கை நன்றாக வேக வைத்து , தோலை உரித்து சமைக்க வேண்டும் . இல்லையெனில் நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
நல்லதே செய்
ஒரு பெரிய முதலாளியிடம் பல அடிமைகள் வேலை செய்து வந்தனர். அவர்கள் பல வகையிலும் கொடுமைப் படுத்தப்பட்டு வந்தனர். துன்பத்திற்குள்ளான அவர்களில் ஒருவன் முதலாளியிடமிருந்து எப்படியோ தப்பி காட்டிற்குள் ஓடி விட்டான்.
அவன் காட்டில் ஒளிந்து திரிந்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் அருகில் வந்தது. அது மிகுந்த வலியால் துடிப்பதை அடிமை பார்த்தான். அவன் சிறிதும் பயம் இல்லாமல் அதன் காலைத் தூக்கிப் பார்த்தான். அதன் பாதத்தில் ஒரு பெரிய முள் தைத்திருந்ததைப் பார்த்தான். சிங்கத்தின் காலில் தைத்திருந்த முள்ளை மிகவும் சிரமப்பட்டுப் பிடுங்கி எறிந்தான். அதன் காலை தடவிக் கொடுத்தான். சிங்கமானது ஆபத்தில் தனக்கு உதவிய அந்த மனிதனை நன்றியுணர்வுடன் பார்த்துவிட்டு வலி நீங்கி மகிழ்ச்சியுடன் சென்றது.
காட்டில் அவன் இருப்பதை அறிந்த அந்த அடிமை மனிதனை முதலாளியின் ஆட்கள் பிடித்துச் சென்றனர். அந்தக் காலத்தில் தப்பியோடும் அடிமைகளுக்கு மரண தண்டனை அளிப்பது வழக்கம். அதன்படி ஒரு கூண்டிற்குள் ஒரு சிங்கத்தை அடைத்து அச்சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு வைத்து அந்த அடிமை மனிதனை அக்கூண்டிற்குள் தள்ளிவிட்டு சிங்கத்தை ஏவி விடுவர். அவ்வாறு இந்த அடிமையையும் சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் தள்ளிவிட்டனர். பசியோடு இருந்த அந்த சிங்கம் அந்த அடிமையை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவன் அருகில் வந்ததும், அந்த மனிதன் தன் காலில் முள் தைத்து அவதிப்பட்டபோது உதவியவன் என்பதை அடையாளம் கண்டு கொண்டது. மிகவும் பணிவுடன் அவன் அருகில் வந்து வாலை ஆட்டிக் கொண்டு இருந்தது. அடிமை, சிங்கத்தைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசனும், பொதுமக்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அரசன், அடிமை மனிதனிடம் விபரங்களைக் கேட்டறிந்தான். அடிமை மனிதன் சொன்ன செய்தியைக் கேட்டு அறிந்த அரசன் அடிமையை விடுதலை செய்தான். நன்றியுணர்வு மிக்க சிங்கத்தைக் காட்டில் கொண்டுபோய் விடச் செய்தான்.
நீதி :
நமக்கு நன்மை செய்தவனுக்கு நாம் நன்றி மறவாமல் நடக்க வேண்டும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮தமிழகத்தில் திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
🔮 பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா.
🔮ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள நடவடிக்கை: 10,000 அதிநவீன அமெரிக்க துப்பாக்கிகள்,இந்திய ராணுவத்தினருக்கு வழங்கல்.
🔮செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளின் 9 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 திட்டமிட்ட நேரப்படி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
🔮பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி என இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
🔮முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்.
🔮மேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா.
HEADLINES
🔮Citizenship Bill protests: Army on standby in Assam, internet suspended, curfew in Guwahati
🔮PSLV strikes gold, touches 50th mission milestone with RISAT- 2BR1 launch: ISRO.
🔮KL Rahul, Rohit Sharma, Virat Kohli power India to 240/3 against West Indies.
🔮Chinese city turns into ghost town after Samsung shifts operation to India, Vietnam.
🔮Rajya Sabha passes the Citizenship (Amendment) Bill.
No comments:
Post a Comment