காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04-12-2019 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
04-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்-245

அதிகாரம் : அருளுடைமை

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் 
 மல்லன்மா ஞாலங் கரி.

மு.வ உரை:

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

கருணாநிதி  உரை:

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

சாலமன் பாப்பையா உரை:

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

தினந்தோறும் ஒருமணி நேரம் புத்தகம் படிப்பதற்கென்றே நேரம் ஒதுக்கினால் சில வருடங்களில் நீங்கள் ஓர் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்வீர்கள்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
A hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Beaker - கண்ணாடிக் குவளை
2. Beard - தாடி
3. Beak - பறவை அலகு
4. Bedbug - மூட்டைப்பூச்சி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. கடலில் கலக்காத நதி எது ?

 யமுனை

2. பிளாஸ்டிக் பாலம் கட்டியுள்ள நாடு எது ?

 ஸ்காட்லாந்து

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர், அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணியின் பெயர்- அது என்ன ?

 நாகம்

2. சில நேரங்களில் வந்தும்  கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன ?

 மழை 

✡✡✡✡✡✡✡
Daily English

1. She lives near my house.
2. Her name is Kanishka.
3. My father gave me a puppy.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

சாமை

🌾 சாமையானது புஞ்சை என்றழைக்கப்படும் புன்செய் நிலத்தில் பயிரிடப்படும் சிறுதானிய உணவு வகைகளில் ஒன்றாகும். 

🌾 இது ஒரு புல் இனத்தைச் சார்ந்த புன்செய் நிலப் பயிராகும்.

🌾தமிழ்நாட்டில் மலை கிராமங்களில் உள்ள மக்கள் சாமையினை உணவுப் பொருளாக பயன்படுத்துகின்றனர்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

கழுதையின் தந்திரம்

வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவதற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது. அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்டபோது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. ஓடையில் விழுந்ததால் கழுதையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று. ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந்தான். ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. 

வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத்தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று. 

நீதி :
தெரிந்தே தவறு செய்யக் கூடாது

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮எங்களது தனிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் பணியாற்றுவதற்கு முன் அனுமதி பெறுங்கள் என இந்திய கடலில் இயங்கும் கப்பல்கள் குறித்து சீனாவை கடற்படை எச்சரித்து உள்ளது.

🔮நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்து உள்ளார்.

🔮நிலவில் தரையிறங்க முற்பட்ட விக்ரம் லேண்டர் மோதிய பகுதியை நாசா கண்டறிந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளது.

🔮பெய்து வரும் மழையால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது.

🔮தெற்காசிய விளையாட்டு போட்டியின், டிரையத்லானில் இந்தியாவுக்கு 4 பதக்கம் கிடைத்தது.


🔮இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) தனது இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔮சுவிட்சர்லாந்தில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுகிறது.

HEADLINES

🔮One Nation, One Ration Card’ will be effective from next June, says Ram Vilas Paswan.

🔮Finland's President accepts Prime Minister's resignation, asks government to stay on in caretaker role.

🔮Nathan Lyon spins Australia to victory in second Test.

🔮Punjab government signs pact to study hyperloop transport feasibility.


🔮Meet Shivangi, the Bihar girl who created history by becoming Navy's first woman pilot.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...