காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
10-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 130
அதிகாரம் : அடக்கமுடைமை
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
மு.வ உரை:
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
கருணாநிதி உரை:
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
உண்மை வழியில் நடை பயிலுங்கள். பிறருக்கு இதமான நன்மைகளைச் செய்யுங்கள். இந்த வகையில் வாழ்வது மிகவும் கடினமான ஒன்று தான்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
Be slow to promise but quick to
perform
ஆலோசித்து வாக்கு
கொடு விரைந்து நிறைவேற்று
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. Cabinet - மந்திரி சபை
2. Calk - குதிரை லாடம்
3. Camphor - கற்பூரம்
4. Canal - கால்வாய்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ?
ஆல்டி மீட்டர்
2. ஜோக் நீர்வீழ்ச்சி எந்த மாநிலத்தில் உள்ளது ?
கர்நாடகம்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. வித்தில்லாமல் விளையும், வெட்டாமல் சாயும், அது என்ன ?
வாழை
2. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும், அது என்ன ?
மஞ்சள்
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
1. I played with my friend.
2. We sat inside and sang songs.
3. I wake up in the morning.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
கொள்ளு
🍊 கொள்ளு என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனை தென் தமிழகத்தில் காணம், முதிரை எனவும் கூறுவார்கள்.
🍊 கொள்ளு தென்னிந்திய உணவில் இடம்பெற்றுள்ள பயறு வகைகளில் முக்கியமான ஒன்றாகும்.
🍊 கொள்ளு, தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்தில் காணப்படும்.பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
நட்புக்குத் துரோகம்
ஒரு அடர்ந்த காட்டில் வசித்து வந்த ஒரு நரியும், ஒரு கழுதையும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து நாள்தோறும் இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், அப்படி இரைத் தேடச் செல்லும் போது இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்க போராட வேண்டும் என்றும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று நரியினை வழி மறித்தது. நரி உடனே சிங்கத்தை நோக்கி, மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னை கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. என்னுடைய நண்பனாகக் கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அந்த கழுதையை தின்பதால் உங்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு உணவு கிடைக்கும் என்று கூறியது. சிங்கமும் ஒப்புக் கொண்டது. நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.
நண்பனே! இரை தேடச் செல்லலாமா? எனக் கழுதையை அழைத்துக் கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிங்கமானது, கழுதையின் மீது பாய்ந்துக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது. நரி பதறிப் போய், மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் கூட்டி வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே! என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.
நீ உன் நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காதவன். நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்று என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.
நீதி :
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮ரோபோ ஓட்டல் மற்றும் சோதனைக்காக எலிகளுடன் விண்கலம் ஒன்று சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது.
🔮எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தமிழகம் வந்தடைந்துள்ளதால், வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔮பின்லாந்து நாட்டை சேர்ந்த சன்னா மரின் என்ற பெண் ஒருவர் உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆனார்.
🔮மனித மேம்பாட்டு அட்டவணையில் இந்தியா 130-வது இடத்தில் இருந்து 129-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
🔮தெற்காசிய விளையாட்டில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தங்கப்பதக்கம் வென்றார்

HEADLINES
🔮Russia banned from Tokyo Olympics, football world cup over doping scandal.
🔮Over 3 crore saplings planted as Telangana ‘green challenge' surpasses target.
🔮India and Australi deliberated on prevailing regional security concerns and explored ways for cooperation in field of defence industry and technology, said the Defence Ministry.
🔮Chennai’s National Art Gallery to be open to the public in 3 months
🔮Wasim Jaffer becomes first Indian to play 150 Ranji matches

No comments:
Post a Comment