காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
03-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 416
அதிகாரம் : கேள்வி
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
மு.வ உரை:
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
கருணாநிதி உரை:
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
மாணவ மணிகளின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர் பங்கு என்பது, ஏணி போன்றது. அவர்கள் அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வடைகிறார்கள். ஆனால் அந்த ஏணி மட்டும் அதே நிலையில் இருக்கும்.
- அப்துல்கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
A guilty
conscience needs no Accuser
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. Battalion - போர் அணிப்பிரிவு
2. Battery - மின்கலம்
3. Battle - போர்/ சண்டை
4. Bazaar - கடைத்தெரு
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. நமது உடலில் எத்தனை விலா எலும்புகள் உள்ளன ?
24 எலும்புகள்
2. ஜப்பான் நட்டின் முந்தைய பெயர் என்ன ?
நிப்போன்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான், அது என்ன?
உப்பு
2. ஆகாயத்தில் பறக்கும், அக்கம் பக்கம் போகாது - அது என்ன ?
கொடி
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
1. I water my plants daily
2. I go to school every day
3. I met my friend
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
கேழ்வரகு
🌾 கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும்.
🌾 இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பையாகும்.
🌾 எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌾 இந்தியாவில் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம் கேழ்வரகு.
🌾கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
கரடியும் இரண்டு நண்பர்களும்
ஒரு ஊரில் இரண்டு இணை பிரியாத நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராகவன் மற்றொருவன் சுந்தரன். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராகவன், சுந்தரனிடம் நீ எதைப்பற்றியும் பயபடாமல் என்னுடன் வா. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கூறினான்.
காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கரடி ஒன்றின் உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி வந்து கொண்டிருந்தது. கரடியைக் கண்டதுமே இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. சில வினாடிகள் ஓடிய பிறகு ராகவன் ஒரு மரம் இருப்பதை கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராகவன் ஏறி அமர்ந்து கொண்டான்.
சுந்தரனுக்கோ மரம் ஏறத் தெரியாது என்று ராகவன் நன்கு அறிந்திருந்தும் அவனைக் கீழே விட்டு விட்டுத் தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற சுய நலத்தோடு ராகவன் நடந்து கொண்டான். சுந்தரனுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் இறந்தவனைப்போல் மூச்சை அடக்கிக் கொண்டு படுத்துக் கொண்டான்.
அப்போது அங்கு வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. சுந்தரன் இறந்துவிட்டான் என்று நினைத்து அந்த கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. சுந்தரனின் காதருகே சென்று கரடி முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராகவன் கரடி சுந்தரனிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.
கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராகவன், கீழே இறங்கி வந்து சுந்தரனை எழுப்பினான். சுந்தரா எழுந்திரி நாம் தப்பி விட்டோம். அந்த கரடி சென்று விட்டது என்று கூறிச் சுந்தரனை எழுப்பினான். சுந்தரனும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
ராகவன், சுந்தரனிடம், கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது? என்று கேட்டான். அதற்குப் சுந்தரன், ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது என்றான். சுந்தரனின் பதிலைக் கேட்டு, ராகவன் தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சுந்தரனோ இனி மேல் நம் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறி விட்டுத் தனியே நடந்து சென்றான்.
நீதி :
ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
🔮வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
🔮தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் பெருமையை சொல்லும் ‘டைட்டன்’ நிறுவனத்தின் ‘நம்ம தமிழ்நாடு’ கைக்கடிகாரங்கள் அறிமுகப் படுத்தியுள்ளன.
🔮குடிநீர் மற்றும் பாசனத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர் மட்டம் கனமழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது.
🔮வரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்.
🔮தமிழக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியீடு -டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு.

HEADLINES
🔮Air India ferries Swedish Royal couple to India on state visit.
🔮Polls for Tamil Nadu rural local bodies on Dec 27, 30, says State Election Commissioner.
🔮HSL poised to deliver India’s first missile tracking ship in New Year.
🔮TN Rains: Chennai’s water reservoirs receive copious inflows over the weekend.
🔮Karnataka prevails over Tamil Nadu in the heart-stopping final of the Syed Mushtaq Ali Trophy.

No comments:
Post a Comment