காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 29-02-2020 - T.தென்னரசு

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
29-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 503

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 

 இன்மை அரிதே வெளிறு.

பொருள்:
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

இரண்டு பக்கம் கூர்மையாக உள்ள கத்தியை கவனமாக கையாள வேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு மிகவும் ஜாக்கிரதையாக பழக வேண்டும்.
 - கண்ணதாசன்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

ZODIAC-ராசி

1. Sagittarius - தனுசு
2. Capricorn - மகரம்
3. Aquarius - கும்பம்
4. Pisces - மீனம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.ஆங்கில உயிர் எழுத்துக்கள் ஐந்தும் இடம் பெறும் மிகச் சிறிய வார்த்தை எது?

 Education

2. மீனின் இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?

 மூன்று

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. The police found the body in a river.
2. Many strange plants and fish live on the sea bed.
3. The beggar usually sits on the pavement.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

பட்டுப்புழு




🐛 முதன்முதலில் சீனாவில் தான் பட்டு இழைகளைக் கொண்டு ஆடை தயாரித்தார்கள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டது. 

🐛 ரோமானியர்கள் எவ்வளவு முயன்றும் இதன் இரகசியத்தை அறிய முடியவில்லை. அதன் பின் ஜப்பானியர்கள் இதனை தெரிந்து கொண்டு, ப‌ட்டு நூல் வ‌ள‌ர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப் பன்மடங்கு உற்பத்தி செய்தார்கள்.

பின்னர் ஜப்பான் பட்டு நெசவு வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும், சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

இரண்டு தண்டவாளங்கள்

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது. மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது. தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது. நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்? உண்மையாக நாம் என்ன செய்வோம்…? ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம். ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார். உண்மை தான் என்றோம். இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பாற்றபடுகிறது. 


ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது. இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது. இன்றைய நிலை நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான். தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43-வது அமர்வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 10 அம்ச ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

🔮அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

🔮மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.இதனால் அங்குள்ள இந்தியர்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

🔮தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

🔮பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ததோடு அரைஇறுதிக்கும் முன்னேறியது.


🔮மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🔮கோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் :மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

HEADLINES

🔮GDP growth slips to 4.7% in third quarter compared to 5.6% in previous year.

🔮Madras High Court in the process of getting child-friendly chambers, says Chief Justice Sahi.

🔮Centre committed to individual, judicial and media freedom: Ravi Shankar Prasad on HC judge transfer.


🔮Seventeen new planets, including one Earth-sized habitable world discovered.

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 28-02-2020 - T.தென்னரசு

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
28-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண் - 792

அதிகாரம் : நட்பாராய்தல்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை 

 தான்சாம் துயரம் தரும்.


பொருள்:

ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

உனது பிரச்சினைகளை உன்னால் தான் சரிசெய்ய முடியும். ஏனென்றால் அதை உருவாக்கியவன் நீ தானே !
- ஓசோ

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

ஆடு பகையாம். குட்டி உறவாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

ZODIAC - ராசி

1. Leo - சிம்மம்
2. Virgo - கன்னி
3. Libra - துலாம்
4. Scorpio - விருச்சிகம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

இன்று (28-02-2020)கஸ்தூரிபாய் நினைவு நாள்

1. தமிழ்நாட்டில் வெள்ளை களிமண் கிடைக்கும் இடம் எது ?

 கரூர் மாவட்டம்

2. தமிழ்நாட்டில் பின்னலாடைத் தொழிலுக்கு பெயர் பெற்ற ஊர் எது ?

 திருப்பூர்


✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The ball bounced down the stairs.
2. The flower vase is made of brass.
3. We breathe through our nose.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

குடைமிளகாய்



🌱 குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும்.

🌱 இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.

குடைமிளகாய்ச் செடி மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடிகளாகும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உடைவாள்

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்து தான் செல்ல வேண்டும். முல்லா நீண்ட தொலைவு பயணம் புறப்பட போகும் செய்தியை அறிந்த அண்டை வீட்டுக்காரர் திருடர் பயம் காட்டில் அதிகம் இருக்கும் என்று மிகவும் கவலைப்பட்டார். ஆதலால் முல்லாவுக்கு வழியில் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று அண்டை வீட்டுக்காரர் உடைவாள் ஒன்றை அன்போடு கொடுத்து அனுப்பினார். முல்லாவும் அதை மரியாதையுடன் வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டு பிரயாணத்தை தொடங்கலானார்.

ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது அவரை நான்கு திருடர்கள் வழிமறித்துக் கொண்டனர். கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்து விடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் என்று திருடர்கள் கேட்டனர். என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை என்றார் முல்லா. அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் என்றனர்.

கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல இயலாது என்று நினைத்த முல்லா ஒரு யோசனைச் செய்தார். என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா? என்று கேட்டார் முல்லா. அந்த உடைவாள் விலை மதிப்புள்ள அருமையான வாள். அதனை வாங்கிப் பார்த்த கள்வர்கள் தங்களுடையத் தொழிலுக்கு பயன்படும் என்று உடைவாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர். பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.

வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று பிராயணம் எவ்வாறு இருந்தது என விசாரித்தார். எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது என்றார் முல்லா. வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா? என அண்டை வீட்டுக்காரர் கேட்டார். அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலைமையை சமாளித்து விட்டேன் என்றார் முல்லா.

இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. அதனால் கொடுத்து விடுங்கள் என்றார் அண்டை வீட்டுக்காரர். அதைத்தான் அவர்களிடம் கொடுத்து விட்டேனே என்றார் முல்லா. காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நீதி :

ஒருவனுக்கு தேவையானதைக் கொடுத்து விட்டால் அவன் நம்மை ஒன்றும் செய்ய மாட்டான். அதே சமயம் பலம் மிக்கவரிடம் பலம் இல்லாதவன் மோதி ஜெயிக்க முடியாது. ஆனால் பலம் இல்லாதவன் தன் அறிவால் ஜெயிக்க முடியும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

🔮உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 50 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

🔮பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

🔮டெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.


🔮உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்..: 6வது இடத்தில் இந்தியா!

🔮கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது.

HEADLINES

🔮Pulwama attack accused granted bail as NIA failed to file charge-sheet within prescribed time.

🔮9-year-old Meghalaya girl, creator of an anti-bullying app, invited to Silicon Valley.

🔮Over 600 Indian fishermen in Iran seek evacuation over coronavirus scare.

🔮 New COVID-19 epidemic at ‘decisive point’: WHO chief.


🔮ICC Women’s T20 World Cup | Healy, Mooney lead Australia to crushing win over Bangladesh.

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 27-02-2020 - T.தென்னரசு

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
27-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண் - 354

அதிகாரம் : மெய்யுணர்தல்

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே 

 மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.


பொருள்:


உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

 - ஜவஹர்லால் நேரு

✡✡✡✡✡✡✡✡
பழமொழி

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும் 
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

ZODIAC - ராசி

1. Aries - மேஷம்
2. Taurus - ரிஷிபம்
3. Gemini - மிதுனம்
4. Cancer - கடகம் 

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வருவது எது ?

 பூட்டு

2. கொடைக்கானலில் அழகும் அபாயமும் கொண்ட பள்ளத்தாக்கு எது?

பசுமை பள்ளத்தாக்கு

✡✡✡✡✡✡✡✡
Daily English
BASIC ENGLISH SENTENCES


1. Elephant is a big animal.
2My mother gave me some biscuits.
3. The wind blows from the sea.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !



சணல்
🍃 இதன் தாயகம் ஆப்ரிக்கா என்று கூறப்படுகிறது. இது பாரம்பரிய கோர்கோருஸ் டிலாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

🍃 பண்டைய காலத்திலேயே சணல் உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்திலேயே சணல் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்த போது சணல் வர்த்தகத்தை முதன்மையாக கொண்டிருந்தனர்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சணலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து இங்கிலாந்தில் அதிக விலைக்கு விற்று வந்தனர்.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

வெள்ளை குதிரை(சிரிப்பு கதை)

ஒரு நாள் காலை ஒருவன் மிகப் பதற்றத்துடன் ஒரு டாக்டரிடம் வந்தான். டாக்டர், இன்று காலை தெரியாமல் ஒரு குதிரையை விழுங்கி விட்டேன். டாக்டர் கேட்டார், என்னப்பா இது, யாராவது குதிரையை விழுங்குவார்களா? ஈயை வேண்டுமானால் விழுங்கி இருப்பாய்.

என்ன டாக்டர், குதிரைக்கும் ஈக்கும் வித்தியாசம் தெரியாதவனா நான். குதிரை வயிற்றில் இருந்து கொண்டு உதைக்குது. ஏதாவது உடனே செய்யுங்கள். என்றான் வந்தவன். மனோதத்துவரீதியில் தான் இவரைக் குணப்படுத்த வேண்டும் என முடிவு செய்த டாக்டர், உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று மயக்க மருந்து கொடுத்தார்.

தனது உதவியாளரைக் கூப்பிட்டு, பக்கத்திலுள்ள குதிரை பயிற்சி நிலையத்திலிருந்து ஒரு குதிரையை வாடகைக்கு எடுத்து வந்து நோயாளி இருந்த அறை ஜன்னலுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் கட்ட ஏற்பாடு செய்தார். மயக்கம் தெளிந்து அவன் எழுந்த போது, டாக்டர், இதோ, இந்த குதிரை தான் உன் வயிற்றில் இருந்தது. அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விட்டேன். இப்போது உனக்கு திருப்தியா? என்று கேட்டார்.

ஐயயோ டாக்டர். இக்குதிரை பழுப்பு நிறத்தில் அல்லவா இருக்கிறது? நான் விழுங்கிய குதிரை வெள்ளை நிறம் என்றான். டாக்டர் மயங்கி விழுந்தார்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

🔮டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.

🔮எல்லை தாண்டி பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படைகள் தற்போது தயக்கம் காட்டுவதில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

🔮கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

🔮இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

🔮கோழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பண்ணையாளர்கள் நேரில் வலியுறுத்தினர்.

🔮கேன்ஸ் ஓபன் செஸ் போட்டியில் சென்னை மாணவர் குகேஷ் முதலிடம் பிடித்தார்.


🔮கொரோனா வைரஸ் அபாயம்: தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

HEADLINES

🔮new daily virus cases outside China than inside: WHO

🔮Goodbye, tennis: Maria Sharapova announces retirement.

🔮Edappadi says proof documents not compulsory for NPR.

🔮CHENNAI: Activated charcoal is not a permitted food additive, say food safety officials.

🔮Anyone targeting minorities in Pakistan would be dealt with strictly: Imran Khan.


🔮When a 13-year-old Ludhiana girl impressed Microsoft CEO Satya Nadella.

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 26-02-2020 - T.தென்னரசு

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
26-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 1022

அதிகாரம் : குடி செயல்வகை

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் 
 நீள்வினையால் நீளும் குடி.

பொருள்:

ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட , மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
    அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரம் கதிர் அறுவாள்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Planets - கோள்கள்

1. Jupiter - வியாழன்
2. Saturn - சனி
3. Uranus - யுரேனஸ்
4. Neptune - நெப்டியூன்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. சேலத்தில் உள்ள மிகப்பெரிய அணை எது?

 மேட்டூர்

2. நாமக்கல் மாவட்டத்தில் அரசு மூலிகப் பண்ணைத் தோட்டம் எங்குள்ளது ?

கொல்லிமலை

✡✡✡✡✡✡✡✡
Daily English
Poly syllabic words
1. laboratory - lab-o-ra-to-ry
2. multiplicity - mul-ti-plic-i-ty
3. participation - par-tic-i-pa-tion
4. possibility - pos-si-bil-i-ty

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

மக்காச்சோளம்

🌽 இதன் தாயகம் நடு அமெரிக்கா என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அமெரிக்க கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது.

🌽 தற்பொழுது மக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம் ஆகும். இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது.

சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அன்புக்கு இல்லை ஆபத்து

விதிரர் என்ற முனிவரின் புகழ் எங்கும் பரவியதால் அவரது சகோதரர்கள் பொறாமை கொண்டனர். முனிவர் உயிருடன் இருக்கும் வரை தங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் அவரைக் கொல்ல திட்டமிட்டனர். கொடிய யாகம் நடத்தினர். அதிலிருந்து பூதம் ஒன்று கிளம்பியது.

யாகம் நடத்திய தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை கட்டளை இடுங்கள் என பூதம் அவர்களிடம் வேண்டியது. நீ கனித்திரரை கொண்டு உடனே அவரது மாமிசத்தை புசிக்க வேண்டும் என கட்டளையிட்டனர். முனிவரின் இருப்பிடத்திற்கு சென்றது. தியானத்தில் ஆழ்ந்திருந்த அவரது முகத்தில் அன்பு பிரகாசித்தது. அந்த நல்லவரைக் கொல்ல மனம் இல்லாமல் பூதம் திரும்பியது.

கொடுக்கப்பட்ட வேலையை செய்யாவிட்டால் கட்டளை இட்டவர்களைக் கொன்று தின்னும் இயல்பு பூதத்திற்கு உண்டு. அதன்படி யாகசாலைக்கு வந்த பூதம் கனித்திர முனிவர்களின் சகோதரர்களைக் கொன்று தின்றது. இறுதியில் வேள்வித்தீயில் குதித்து மறைந்தது. வினை விதைத்தவர்கள் வினை அறுத்தார்கள்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮ஈரான் துணை சுகாதார மந்திரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

🔮இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்கா தயார் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

🔮இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையே ஐந்து முக்கிய பிரிவுகளில் பேச்சுவார்த்தை நடந்தன, குடியுரிமை திருத்த சட்டம் இடம்பெறவில்லை என வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

🔮இந்திய ரெயில்வேக்கு கடந்த 3 வருடங்களில் பயணச்சீட்டை ரத்து செய்ததன் வழியே ரூ.4 ஆயிரத்து 684 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து உள்ளது.

🔮2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டிகாரில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள் இடம்பெற உள்ளன.

🔮டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை வெளியீடு: மார்ச் 7-ம் தேதி விவசாய சங்கத்தினர் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா.

🔮இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு.

HEADLINES
🔮U.S. working with Pakistan to defeat terrorism, says Trump.

🔮COVID-19: Chartered flight to bring back Indians on cruise ship off Japan coast.

🔮Melania Trump attends ‘Happiness Class’ in govt school, says curriculum inspiring.

🔮Xiaomi to bring ISRO technology NavIC to smartphones in 2020.

🔮In a few days, you can watch and download films as you travel on Chennai Metro.

🔮21 Indian cities among world's 30 most polluted; Ghaziabad tops list: Report.

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...