காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16-12-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
16-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 720

அதிகாரம் : அவையறிதல்

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 
 அல்லார்முன் கோட்டி கொளல்.

மு.வ உரை:

தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

கருணாநிதி  உரை:

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட ஒரு அரிய செயலை செய்வது மேலானது.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
Beter pay the cook than the doctor
வைத்தியனுக்கு கொடுப்பதை விட வானிகனுக்கு கொடு
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Debate - வாக்குவாதம்
2. Deception - வஞ்சகம்
3. Depth - ஆழம்
4. Desire - ஆசை/ஆவல்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. பிங்பாங் என அழைக்கப்படும் விளையாட்டு எது?

டேபிள் டென்னிஸ்

2. எந்த விளையாட்டில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகிறது?

ஸ்நூக்கர்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வழி இல்லை. அது என்ன ?

முட்டை

2. அடிக்காத பிள்ளை  அலறித் துடிக்குது, அது என்ன ?

சங்கு

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. That is not a pencil
2. Milk is good to eat
3. This yard is full of children


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

பீட்ரூட் 

🍊 பீட்ரூட் என்பது ஒரு வகைக் கிழங்கு வகையாகும். இந்த பீட்ரூட் கிழங்குகள் சிகப்பு அல்லது நாவல் நிறம் உடையவை. இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் குறிப்பர்.

🍊 இக்கிழங்குகள் ஐரோப்பியர்களால் பெரிதும் உண்ணப்பட்டு வந்தது.

🍊 முதலில் இதன் இலைகளை மட்டும் சமைத்து சாப்பிட்டனர். அப்போது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பீட்ரூட் கிழங்கை தலைவலிக்கும், பல்வலிக்கும் மருந்தாக பயன்படுத்தினார்கள்.

🍊மற்ற காய்கறிகளை விட பீட்ரூட்டில் சர்க்கரை அதிகம்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

பலமும் பயமும்

சிங்கம் ஒன்று காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தது. அதற்குச் சேவல் கூவும் ஒலியைக் கேட்டால் போதும் மிகவும் பயந்துவிடும். நான் காட்டரசனாக மிகுந்த பலத்துடன் இருந்து என்ன பயன்? ஒரு சேவல் கூவுவதைக் கண்டு பயந்து வாழ்வது ஒரு வாழ்வா? என்று தனக்குத்தானே மிகவும் நொந்து கொண்டே இருந்தது. அப்போது எதிரே ஒரு யானை மிகவும் சோர்வுடன் தனது காதுகளை இருபக்கமும் வேகமாக ஆட்டிக்கொண்டே வந்தது. அதனைக் கண்ட சிங்கம், யானையாரே, மிகப் பெரிய உருவம் கொண்ட உமக்கு என்ன கவலை? ஏன் வாட்டமாக வருகிறீர்? என்று கேட்டது. 

சிங்க நண்பரே, அதையேன் கேட்கிறீர்? எனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. இதோ எனது காதுகளின் பக்கத்தில் குளவி ஒன்று பறந்துகொண்டே இருக்கிறது. அது காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால் அந்த வலியைத் தாங்க முடியாது. அந்தக் குளவி காதிற்குள் நுழைந்து விடக் கூடாதே என்ற கவலையுடன் காதுகளை ஆட்டிக் கொண்டே வருகிறேன் என்று கூறியது யானை. எத்தகைய வல்லமை உள்ள உயிருக்கும் கூட அதுக்குன்னு ஒரு கவலை நிச்சயம் உண்டு. அதுபோலத்தான் நமக்கும் என்று உலக வழக்கத்தைப் புரிந்து கொண்டு அதிலிருந்து எதற்கும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் சிங்கம் வாழ ஆரம்பித்தது. 

நீதி :
பயம், பலவீனம் இரண்டும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானது. 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எற்பட்ட எரிமலை வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

🔮பொங்கல் பண்டிகையொட்டி தமிழக அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது.

🔮இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி தவறு என்று இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் சூரிய பண்டார கூறியுள்ளார்.

🔮காஞ்சீபுரத்தில் மருத்துவ கல்லூரிக்காக 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

🔮வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 288 ரன்கள் குவித்தது

🔮உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக மாநில தேர்தல் ஆணையம் நியமித்ததுள்ளது.

HEADLINES
🔮Mandatory to link PAN-Aadhaar by December 31: Income Tax Department.

🔮Anti-Citizenship Act stir enters third day in Bengal, internet services suspended.

🔮Pant back amongst runs as India recover to 287 against West Indies.

🔮Southern Philippines hit by 6.8 magnitude earthquake.

🔮INTERNATIONAL NEWS: Major states snub calls for climate action as U.N. summit wraps up

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...