காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18-02-2020 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
18-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 484

அதிகாரம் : காலமறிதல்

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 

 கருதி இடத்தாற் செயின்.

பொருள்:


ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

சிறந்தவன் யார்?

ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவன்,
கோபத்திலும் பொறுமையுடன் இருப்பவன்,
தோல்வியிலும் விடாமுயற்சி கொள்பவன்,
வறுமையிலும் உதவி செய்யும் மனம் கொண்டிருப்பவன்,
துன்பத்திலும் துணிவுடன் இருப்பவன்.

 -சுவாமி விவேகானந்தர்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

Single tree makes no forest.

தனிமரம் தோப்பாகாது.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

உலோகங்கள்

1. காந்தம் - Magnet
2. பாதரசம் - Mercury
3. வெள்ளி - Silver
4. எஃகு - Steel
5. தகரம் - Tin
6. துத்தநாகம் - Zinc

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.கல்வராயன் மலைக்குன்றுகள் எந்த மாவட்டத்தில் உள்ளது ?

 விழுப்புரம்

2.நீலகிரி மாவட்டத்தில் இராணுவப் பயிற்சி நிலையம் எங்குள்ளது?

 வெலிங்டன்

✡✡✡✡✡✡✡✡
Daily English
Tri-syllabic words
1. absolute - ab-so-lute
2. argument - ar-gu-ment
3. assistance - as-sist-ance
4. atomic - a-tom-ic


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

பசுமாடு

🐄 மாடுகளில் பெண் இனத்தை பசுமாடு என்றும், ஆண் இனத்தை காளைமாடு என்றும் குறிப்பிடுவர்.

🐄 இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும்.


🐄 பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் பசுமாடுகள் பாலுக்காகவும், காளைமாடுகள் வண்டி இழுக்கவும், வயல்களில் ஏர்பூட்டி நிலத்தை உழவும் வளர்க்கப்படுகின்றன.

🐄தமிழகத்தில் காளையை அடக்கும் விளையாட்டு ஒரு வீர விளையாட்டாக கொண்டாடப்படுகிறது.

🐄இந்தியா முழுவதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக 26 வகை மாட்டினங்கள் உள்ளன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

A Wise Old Owl

There was an old owl that lived in an oak. Everyday he saw incidents happening around him. Yesterday he saw a boy helping an old man to carry a heavy basket. Today he saw a girl shouting at her mother. The more he saw the less he spoke.


As he spoke less, he heard more. He heard people talking and telling stories. He heard a woman saying that an elephant jumped over a fence. He also heard a man saying that he had never made a mistake.


The old owl had seen and heard about what happened to people. Some became better and some became worse. But the old owl had become wiser each and every day.
Moral of the story :


You should be observant, talk less but listen more. This will make you a wise person.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

🔮நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை மார்ச் 3ந்தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

🔮சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா தனது ஆதரவை வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்ந்துள்ளது.

🔮நாளை முதல் பழனி மலைக்கோவில் முதலாவது எண் மின்இழுவை ரயில் பராமரிப்பு பணி காரணமாக 20 நாட்களுக்கு இயக்கப்படாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

🔮எம்.ஆர்.எப். கார் பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

🔮டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இந்திய அரசு நேற்று முன்தினம் விசா வழங்கி அனுமதி அளித்துள்ளது.

🔮ஆயுட்காலம் முடித்தும் தொடர்ந்து இயங்கி வரும் முதலாவது அனல்மின் நிலையத்தை 2022க்குள் படிப்படியாக மூட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு.


🔮ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டாலும் அதன் பெயர் மாறாது: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

HEADLINES

🔮Nirbhaya case: fresh death warrants for March 3 against four convicts.

🔮Women Army officers eligible for permanent commission, rules SC.

🔮Turkey making repeated bids to justify Pakistan’s cross-border terror: India.

🔮Peninsular command by next year end, theatre commands by 2022: Gen. Rawat.

🔮India to send medical supplies, bring back Indians from virus-hit Wuhan: Indian Embassy.


🔮CHENNAI: Metro Rail slashes Phase II estimate by ₹7,000 crore.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...