காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14-02-2020 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
14-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 1032

அதிகாரம் : உழவு

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது 
 எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொருள்:

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நாம் கற்றோரின் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பிறகு நாம் படித்த நூல்களிலிருந்து பெற்ற நல்லறிவை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
 - அப்துல்கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
அடக்கமுடமை ஒரு சிறந்த பண்பாகும்.

Humility is the best virtue

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words
(Gems - இரத்தினங்கள்)

1. Sardonyx - கோமேதகம்
2. Topaz -  புஷ்பராகக்கல்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தென்னாட்டு தாகூர் என அழைக்கப்பட்டவர் யார் ?

 வேங்கட ரமணி

2. தமிழ்நாட்டில் புனித பூமி என்று அழைக்கப்படும் ஊர் எது?

 இராமேஸ்வரம்


✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The Marina is the second longest beach in the world.
2. He was angry because the train was late.
3. Raise your hand if you want to ask a question.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

கரும்பு

🌴 சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

🌴 கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது.

🌴 கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு இன்று 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது.

🌴பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும் மேல் கரும்பை உற்பத்தி செய்கின்றன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

கல்விமான்களின் சந்தேகம்

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவை சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யை விட, உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்? என்று சந்தேகத்தைக் கேட்டார்.

அதற்கு முல்லா, அந்த கல்விமானிடம் உலகத்தில் இரும்பை விட தங்கத்துக்கு அதிகமாக மதிப்பு இருக்கிறதே, அது ஏன்? என்று கேட்டார்.

உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கும் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாக ஏதேனும் ஒரிடத்தில் மட்டும் தான் கிடைக்கிறது. அதனால் தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.

பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணம் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடம் வேண்டுமானாலும் தாராளமாக கிடைக்கும். ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுபிடிப்பது தான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால் தான், அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா சொன்னார். அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நீதி :
மதிப்பு இருக்கும் இடத்தில் மரியாதை இருக்கும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

🔮சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் ரூ.31½ லட்சம் வெளிநாட்டு பணம், செல்போன்களும் சிக்கின.

🔮இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்.

🔮நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம், உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் : மத்திய அரசு.

🔮10 வயது கேரள சிறுவனின் ‘ஜீரோ டிகிரி’ கார்னர் கோல்: வீடியோ வைரலால் பலரும் பாராட்டு.

🔮ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்படுகிறது என மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.🔮🔮.



HEADLINES
🔮Narayana Murthy’s son-in-law Rishi Sunak named new Finance Minister of U.K.

🔮Passenger of Hong Kong-Delhi flight quarantined as suspected case of COVID-19.

🔮Three lawyers injured in blast in Lucknow court premises.

🔮WRD plans to restore, improve storage in six waterbodies at a cost of ₹298 cr.

🔮13.62 seconds to glory: Kambala jockey breaks 30-year-old record at event near Mangaluru.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...