காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 28-02-2020 - T.தென்னரசு

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
28-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண் - 792

அதிகாரம் : நட்பாராய்தல்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை 

 தான்சாம் துயரம் தரும்.


பொருள்:

ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

உனது பிரச்சினைகளை உன்னால் தான் சரிசெய்ய முடியும். ஏனென்றால் அதை உருவாக்கியவன் நீ தானே !
- ஓசோ

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

ஆடு பகையாம். குட்டி உறவாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

ZODIAC - ராசி

1. Leo - சிம்மம்
2. Virgo - கன்னி
3. Libra - துலாம்
4. Scorpio - விருச்சிகம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

இன்று (28-02-2020)கஸ்தூரிபாய் நினைவு நாள்

1. தமிழ்நாட்டில் வெள்ளை களிமண் கிடைக்கும் இடம் எது ?

 கரூர் மாவட்டம்

2. தமிழ்நாட்டில் பின்னலாடைத் தொழிலுக்கு பெயர் பெற்ற ஊர் எது ?

 திருப்பூர்


✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The ball bounced down the stairs.
2. The flower vase is made of brass.
3. We breathe through our nose.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

குடைமிளகாய்



🌱 குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும்.

🌱 இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.

குடைமிளகாய்ச் செடி மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடிகளாகும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உடைவாள்

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்து தான் செல்ல வேண்டும். முல்லா நீண்ட தொலைவு பயணம் புறப்பட போகும் செய்தியை அறிந்த அண்டை வீட்டுக்காரர் திருடர் பயம் காட்டில் அதிகம் இருக்கும் என்று மிகவும் கவலைப்பட்டார். ஆதலால் முல்லாவுக்கு வழியில் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று அண்டை வீட்டுக்காரர் உடைவாள் ஒன்றை அன்போடு கொடுத்து அனுப்பினார். முல்லாவும் அதை மரியாதையுடன் வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டு பிரயாணத்தை தொடங்கலானார்.

ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது அவரை நான்கு திருடர்கள் வழிமறித்துக் கொண்டனர். கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்து விடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் என்று திருடர்கள் கேட்டனர். என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை என்றார் முல்லா. அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் என்றனர்.

கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல இயலாது என்று நினைத்த முல்லா ஒரு யோசனைச் செய்தார். என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா? என்று கேட்டார் முல்லா. அந்த உடைவாள் விலை மதிப்புள்ள அருமையான வாள். அதனை வாங்கிப் பார்த்த கள்வர்கள் தங்களுடையத் தொழிலுக்கு பயன்படும் என்று உடைவாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர். பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.

வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று பிராயணம் எவ்வாறு இருந்தது என விசாரித்தார். எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது என்றார் முல்லா. வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா? என அண்டை வீட்டுக்காரர் கேட்டார். அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலைமையை சமாளித்து விட்டேன் என்றார் முல்லா.

இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. அதனால் கொடுத்து விடுங்கள் என்றார் அண்டை வீட்டுக்காரர். அதைத்தான் அவர்களிடம் கொடுத்து விட்டேனே என்றார் முல்லா. காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நீதி :

ஒருவனுக்கு தேவையானதைக் கொடுத்து விட்டால் அவன் நம்மை ஒன்றும் செய்ய மாட்டான். அதே சமயம் பலம் மிக்கவரிடம் பலம் இல்லாதவன் மோதி ஜெயிக்க முடியாது. ஆனால் பலம் இல்லாதவன் தன் அறிவால் ஜெயிக்க முடியும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

🔮உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 50 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

🔮பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

🔮டெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.


🔮உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்..: 6வது இடத்தில் இந்தியா!

🔮கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது.

HEADLINES

🔮Pulwama attack accused granted bail as NIA failed to file charge-sheet within prescribed time.

🔮9-year-old Meghalaya girl, creator of an anti-bullying app, invited to Silicon Valley.

🔮Over 600 Indian fishermen in Iran seek evacuation over coronavirus scare.

🔮 New COVID-19 epidemic at ‘decisive point’: WHO chief.


🔮ICC Women’s T20 World Cup | Healy, Mooney lead Australia to crushing win over Bangladesh.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...