காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
05-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 516
அதிகாரம் : தெரிந்து வினையாடல்
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
பொருள்:
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
ஊக்கத்தைக் கைவிடாதே ! அது தான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
- பேரறிஞர் அண்ணா
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
The child is the father of man.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. Nap - சிறு தூக்கம்
2. Nape - பிடரி
3. Naughty - குறும்புத்தனமான
4. Navel - தொப்புள்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விமானப்படை விமானநிலையம் எங்குள்ளது?
தாம்பரம்
2. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரணாலயம் எது ?
உப்பேரி பறவைகள் சரணாலயம்
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
1. We all want the best for our children.
2. The boy is standing between the cots.
3. The bishop cannot jump over other pieces in chess.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
தேயிலை
🍂 தேயிலை ஒரு பசுமைத் தாவரம் ஆகும். தேயிலை முதன் முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் பயன்படுத்தினர்.
🍂பின் சீனாவிற்கு வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவிலிருந்தும், சீனாவில் இருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
🍂இந்தியவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
கவுரவமான மனிதன்
ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல புகழ் இருந்தது. அவரிடம் நிறைய மாணவர்கள் இருந்தனர். அவருடைய புகழையும், அவரிடம் நிறைய சீடர்கள் இருப்பதைக் கண்டு மற்றொரு துறவி பொறாமைப்பட்டார்.
பொறாமைக்கார துறவி வேண்டுமென்றே புகழ்வாய்ந்த துறவியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்து துறவியிடம் உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை.
என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா? என்று கேட்டார். என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன் என்றார். உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆணவத்துடன் புகழ்பெற்ற துறவியை நோக்கி வந்தார்.
இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள் என்றார். துறவியும் அவ்வாறே சென்றார். ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள் என்றார். அவரும் போனார். சரி, நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி என்றார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பின் குழுவில் உள்ள அமெரிக்க சுகாதார நிபுணர்களை அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
🔮கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி, சீனாவின் உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
🔮இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையில் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 592 கோடியாக உள்ளது.
🔮5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
🔮இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
🔮இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், மலேசியாவிலிருந்து அதிக பாமாயில் வாங்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொள்ளும்: இம்ரான் கான்.
HEADLINES
🔮Under 19 World Cup | India enters final after beating Pakistan by 10 wickets.
🔮Coronavirus | Hong Kong reports first death; death toll in China rises to 425.
🔮No public exams for classes 5 and 8, says TN School Education Minister.
🔮Government working on plan to allow 100 per cent FDI in Air India.
🔮Indian tourists in Bhutan to now pay 'sustainable development fee'.
Super
ReplyDelete