காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04-02-2020 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
04-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 706

அதிகாரம் : குறிப்பறிதல்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 
 கடுத்தது காட்டும் முகம்.

பொருள்:

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

சுயநலம், பேராசை, கோழைத்தனம் இவைகள் தான் நமக்கு தீங்கைத் தரும். எனவே அவைகளை அகற்றி நாம் அனைவரும் குறையின்றி வாழ வேண்டும்.

 - அப்துல்கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

A little string will tie a little bird
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Muddle - குழப்பம்
2. Muffler - கழுத்துக் குட்டைத் துணி
3. Musket - கைத்துப்பாக்கி
4. Mystic - இறை அறிவர்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. காஞ்சி கைலாயநாதர்  கோவிலைக் கட்டியவர் யார் ?

 இரண்டாம் நரசிம்மவர்மன்

2. அஜந்தா குகைகள் மொத்தம் எத்தனை குகைகளைக் கொண்டதாகும் ?

 29 குகைகள்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The temperature was below zero.
2. Indian emblem has four lions.
3. The human brain has three main parts.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

கோகோ

🍋 தியோபிரமா கோகோ என்கிற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள கோகோ பயிரானது, ஸ்டெர்குலியேஸி குடும்பத்தைச் சார்ந்தது. 

🍋 கோகோ தென் அமெரிக்கா நாட்டின் அமேசான் ஆற்றுப் படுகையை தாயகமாக கொண்டது.

🍋 நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது சுமார் கி.மு 2000 ல் கோகோ மரங்கள் வளர்க்கப்பட்டதாக ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. கோகோ மரத்தை கேட்ஸால்கோயாட்டெல் கடவுள் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வந்ததாக மாயர்கள் நம்பினார்கள். கோகோ கடவுள்களின் உணவு என அழைக்கப்பட்டது. 

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அலட்சியத்திற்கு கிடைத்த பரிசு

ஒரு நாள் முல்லா அயல் ஊருக்கு சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காகவே ஒரு பொது குளியல் அறை ஒன்று இருந்தது. முல்லா அழுக்கான ஆடையுடன் அங்கே குளிப்பதற்காக சென்றார். அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்காமல் அலட்சியமாக நடத்தினர். முல்லாவை சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவசரப்படுத்தினர்.

குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதைக் கண்ட வேலைக்காரர்கள், இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகவே தெரிந்து அவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால் இன்னும் நிறைய தங்கக் காசுகள் கொடுத்திருப்பார் என்று நினைத்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்த குளியல் அறைக்கு குளிக்கச் சென்றார். வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்டு கொண்டு போட்டி போட்டுக் கொண்டு முல்லா தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள், வாசனைப் பன்னீர், உடல் துவட்ட உயர்தரமான துவாலை, உடலில் பூசிக்கொள்ள வாசனை திரவியங்கள் கொடுத்து ராஜ உபசாரம் செய்தனர்.

அன்றைய தினம் முல்லா தங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது நிச்சயம் அன்பளிப்பாக கொடுப்பார் என்று வேலைக்காரர்கள் எதிர்பார்த்தனர். முல்லா ஆளுக்கு ஒரு செப்பு காசு மட்டும் தான் கொடுத்தார்.

இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்த செப்பு காசு தானா பரிசு? என்று கேட்டனர். முல்லா, அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே நடந்தார்.

நீதி :
பலனை எதிர்பார்க்காமல் உதவி செய்தால் பலன் கிடைக்கும். பலனை எதிர்பார்த்து செய்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சீனாவில் இருந்து வந்த 12 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

🔮காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.

🔮டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

🔮ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், டொமினிக் திம்மை போராடி வீழ்த்தி 8-வது முறையாக பட்டத்தை வென்றார்.

🔮டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி ஓட்டு போடுவதற்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

🔮சிரியா மற்றும் துருக்கி நாட்டு படைகளுக்கு இடையேயான மோதலில் 19 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

HEADLINES

🔮Third coronavirus case reported in Kerala.

🔮Jamia firing: Wrestler who supplied weapon to juvenile held.

🔮Injured Rohit Sharma out of remainder of New Zealand tour: BCCI source.

🔮Five sentenced to life imprisonment in Ayanavaram sexual assault case.

🔮Colourful artwork brightens women’s ward at Chennai’s Institute of Mental Health.

🔮SpiceJet offers 'free tickets' to flyers who are travelling to Delhi on February 8 to vote.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...