காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10-02-2020 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
10-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 132

அதிகாரம் : ஒழுக்கமுடைமை

 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
 தேரினும் அஃதே துணை.


பொருள்:

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

சில விஷயங்களுக்காக மனக்கலக்கம் அடையாதீர்கள். ஒத்துப் போகும் தன்மையையும் இனிய பண்புகளையும் வளர விடுங்கள்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

கடந்த காலம் திரும்பவும் வராது.

Wasted times never return.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words (mathematics)

1. Amount - மொத்த தொகை
2. Angle -  கோணம்
3. Arc - வில்
4. Axis - அச்சு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. முட்டைகள் பற்றி படிக்கும் அறிவியல்  படிப்பின் பெயர் என்ன ?

 ஊலாஜி

2. இந்தியாவின் பரபரப்பான துறைமுகம் என அழைக்கப்படுவது எது ?

 மும்பை

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The weather was very bad.
2. I love playing badminton.
3. My father gave me a ballpoint pen.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

பருத்தி 

🌺 பருத்தி ஒரு பணப்பயிர் ஆகும். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.

🌺 நில நடுக்கோட்டுப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பருத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

🌺 தொழிற்புரட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் பருத்தித் தொழில் பெரு வளர்ச்சி கண்டதுடன், பருத்தி துணி வகைகள் இங்கிலாந்தின் முன்னணி ஏற்றுமதிப் பொருளாகவும் இருந்தன.

🌺இந்தியாவில் பருத்தி ஒரு முக்கியமான விவசாயப் பயிராக உள்ளது.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அபுபக்கரின் குரு பக்தி

இறைவனது தூதரான முகமது நபியின் புகழானது உலகெங்கிலும் பரவலாயிற்று. அவரது போதனைகள், வழிகாட்டுதல்கள் அனைவராலும் விரும்பி ஏற்கப்பட்டன. 

இறைவனின் காட்சிகளை, இறைவனின் தரிசனத்தை அவ்வப்போது கூறியும் வருவார். இவருக்கு சீடர்கள் இருந்தனர். குருவின் வார்த்தையை மீறாமல் குருபக்தியுடன் கடைபிடித்து வந்தனர். இவரது சீடர்களுள் அபு பக்கர் அனைவரை விடவும் புத்திசாலியாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் திகழ்ந்தான். 

முகமது நபி இறைவனின் ஆணைப்படி, மக்காவிலிருந்து யுத்ரிபுக்கிற்குப் புறப்படலானார். இவர் தன்னோடு அபுபக்கரை அழைத்துச் செல்லலானார். தூரம் அதிகமாக இருந்ததால் ஓய்வெடுத்துச் செல்ல எண்ணினார். இருவரும் தௌர் என்னும் மலைப்பொதும்பை அடைந்தனர். 

நீண்ட நேரம் நடந்ததால் நபிகள் களைப்புற்றார். அபுபக்கர் குருவின் எண்ணத்தை அறிந்து, ஓய்வெடுப்பதற்காக சிறிது இடத்தைச் சுத்தம் செய்யலானான். புதர்கள், முட்களை மாற்றி சரிபடுத்திய அவன், குருவினிடம் ஓய்வெடுக்குமாறு வேண்ட, குருவும் அவன் மடியிலே படுத்து ஓய்வெடுக்கலானார். 

மடியில் படுத்த சிறிது நேரத்தில் குரு தூங்கிவிட்டார். அபுபக்கர், அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தபடி தற்செயலாகத் திரும்பியவன் தம் அருகாமையிலுள்ள பொந்தில் பாம்பினைப் பார்த்து திடுக்கிட்டான். அது கொடிய விஷமுடைய பாம்பு. அது வெளியே வந்தால் தம் குருவினுக்கு ஆபத்து. மேலும், இப்போது குருவை எழுப்பினால் குருவின் தூக்கமும் கலைந்து விடும் என்பதால், தன் காலை எடுத்து அந்த பாம்பு பொந்திலிருந்து வெளியேறாதபடி அதன்மேல் வைத்தான். 

அபுபக்கர் பொந்தில் கால் வைத்த மறுகணம் அக்கொடிய பாம்பானது அவனைக் கடித்தது. அபுபக்கர் பாம்பு கடித்தபோதும் கூச்சலிடாது அமைதியாக இருந்தான். அதன் விஷமானது கொஞ்சம் கொஞ்சமாக ஏறலாயிற்று. அபுபக்கர் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தான். உடலெல்லாம் ஏற்பட்ட வலியால் அவனை அறியாமல் கண்ணீர் கசிந்தது. அவனது கண்ணீர் துளிகள் நபிகள் மீது விழுந்தது. நபிகள் மெல்ல கண் விழித்தார். 

பாம்பு கடித்த பின்னும் அமைதியாக இருந்த தன் சீடனின் பக்தியை நினைத்து பெருமைப்பட்டார். சீடனின்மேல் பரவியபடி இருந்த நஞ்சை நீக்கி அவனை புத்துயிர் பெறச் செய்தார். விஷம் இறங்கியது. அபுபக்கர் மகிழ்ச்சியடைந்தான். குருவின் கால்களில் விழுந்து வணங்கினான். அவனை வாரி எடுத்து அணைத்து முகமது நபி ஆசீர்வாதம் வழங்கினார். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார் என சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

🔮டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.

🔮காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என கால்நடை பூங்கா - அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

🔮சுவீடன் நாட்டு உயரம் தாண்டுதல் வீரர் புதிய உலக சாதனை படைத்து உள்ளார்.அவர் 6.17 மீட்டர் வரை உயரம் தாண்டி  உள்ளார்.

🔮அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு....வானிலை ஆய்வு மையம்.

🔮சேலத்தில் நடந்த கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்தார்.


🔮தாய்லாந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தி 27 பேரை கொன்ற ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

HEADLINES

🔮Laid foundation for $5 trillion economy in Union Budget, says Nirmala Sitharaman.

🔮Delhi 2020 | Final turnout figure delayed as returning officers were busy with scrutiny of data, says Delhi CEO.

🔮Coronavirus: China deaths rise past 800, overtaking SARS toll.

🔮Modi offers India’s help to China to deal with coronavirus outbreak.


🔮CHENNAI :Soon, a multi-level car parking at Thirumangalam Metro Rail station.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...