காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29-11-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
29-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 415

அதிகாரம் : கேள்வி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
 ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

மு.வ உரை:

கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

கருணாநிதி  உரை:

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

சாலமன் பாப்பையா உரை:

கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வாழ்க்கைத்தரம் என்பது அவரவர் குணத்தைப் பொறுத்தே அமைகிறது. நேர்மை, மனத்தூய்மை, பக்தி ஆகிய நற்குணங்களின் மூலம் வாழ்வு மேம்படும்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
A friend in need is a friend in deed
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1.Axle - அச்சு
2. Balcony - முன் முகப்பு
3. Bamboo - மூங்கில்/பிரம்பு
4. Bang - பேரொலி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தர்ம விஜயம் என்ற அறவழியைக் கடைபிடித்தவர் யார்?

 அசோகர்

2. வெண்கடல் எங்குள்ளது ?

 வட ரஷ்யா

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. ஒற்றைக் கிண்ணத்திற்குள் இரட்டைத் தைலங்கள்- அவை எவை?

 முட்டை

2. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன் அது என்ன ?

 கடிதம் 

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. The bun is on the pan
2. The doll is in the box.
3. The clock is on the wall.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

பாலக் கீரை

🍂 பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும்.

🍂 இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும்.

🍂 பின் வட ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது. தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள்.

🍂ஸ்பெயின் நாட்டில் பாலக்கீரையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்

ஒரு காட்டில் ஒரு தவளையும், ஒரு சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத்தவரை ஆதரவுக்கு அழைத்தது. 

தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரையாக்கிக் கொண்டன. 

நீதி :
எளியவன் தனித்து இருந்தால் அவனை வலியவன் வெல்வது எளிது

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தமிழக அரசு 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

🔮3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.

🔮டெல்லியில் மகளிர் பாதுகாப்பிற்காக பிங்க் நிற இரு சக்கர வாகனங்கள் கொண்ட சிறப்பு ரோந்து குழு அமைக்கப்பட்டு உள்ளது.

🔮சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படை அடுத்த ஆண்டு அரபிக்கடலில் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

🔮உள்நாட்டில் தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.

🔮 ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 158-151 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் யி ஹசுன் சென்-சிக் லுக் சென் இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. 

🔮நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.649 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

HEADLINES
🔮Two days before Royal visit, Sweden sends tough statement on Kashmir.

🔮Sri Lankan President Gotabaya Rajapaksa arrives on two-day India visit.

🔮A 1500-square-ft organic terrace garden in the heart of Chennai.

🔮Asian Archery Championship Recurve event | Deepika strikes gold, Ankita wins silver.


No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...