காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
25-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 562
அதிகாரம் : வெருவந்த செய்யாமை
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
மு.வ உரை:
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.
கருணாநிதி உரை:
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
இளைஞர்களின் அறிவுச் சுடரை
ஏற்ற வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
அகல் வட்டம் பகல் மழை
விளக்கம் : அகல் வட்டம் காணப்பட்டால் மழை வர வாய்ப்பு உண்டு
அகல் வட்டம் என்பது (அகல்) விளக்கின் ஒளியைச்சுற்றி பிரகாசமாக தெரியும் வட்டத்தைப்போல சூரியனைச்சுற்றியும் பெரிய வட்டம் தெரியும். அவ்வாறு வானத்தில் அகல்வட்டம் தெளிவாக காணப்பட்டால் மழை வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பது பொருள்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Abyss - நரகம், பாதாளம்
2. Accident - விபத்து
3. Acid - திராவகம்
4. Adult - வயது வந்தவர்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. டென்மார்க் நாட்டின் தேசியப் பறவை எது ?
வானம்பாடி
2. பெரிய பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது ?
ஹீலியம்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. உணவு கொடுத்தால் வளரும். நீர் கொடுத்தால் அழியும்- அது என்ன ?
நெருப்பு
2. ஊசி போல் இருப்பான். ஊரையே அழிப்பான் - அவன் யார் ?
தீக்குச்சி
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
வல்லாரை
🍀 மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது.
🍀 இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும்.
🍀இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மூலிகையாகவும், சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
அழகின் ஆபத்து
ஒரு நாள் கலைமான் ஒன்று தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக நீர் நிலைக்கு வந்தது. நீரை அருந்தும்போது நீரில் தெரியும் தன் கொம்புகளின் நிழலைக் கண்டு பெருமிதம் அடைந்தது. ஆஹா! என் தலையில் உள்ள கொம்புகள் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் என் குச்சிக் கால்கள் என் அழகைக் கெடுக்கின்றது என்று நினைத்தது. தன் அழகிற்கு ஏற்ற கால்கள் இல்லாததை எண்ணி தனக்குத்தானே வருந்தியது.
அந்த வேளையில் ஒரு சிங்கம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த மான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடியது. சிங்கம் துரத்திக் கொண்டே சென்றது. வேகமாக ஓடும் போது மானின் கொம்புகள் செடி, கொடிகளில் மாட்டிக் கொண்டு விடவே, மானால் வேகமாக ஓடமுடியாமல் அச்சிங்கத்திடம் மாட்டிக் கொண்டது. அப்போது தான் மானிற்குப் புரிந்தது. என் உயிரைக் காக்க உதவும் என் கால்களைப் பழித்தேன். எனக்கு எமனாக இருந்த என் கொம்புகளை புகழ்ந்தேன். நன்றி மறந்த எனக்கு இது சரியான தண்டனை என்று கூறி வருந்தியபடி தன் உயிரை விட்டது.
நீதி :
அழகு ஆபத்து.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நடவடிக்கையாக முப்படைகளைச் சேர்ந்த சிறப்புப் பிரிவு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
🔮பிரம்மபுத்திரா புஷ்கர விழா பற்றி நாட்டு மக்கள் பலருக்கு தெரியவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
🔮கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
🔮தமிழகம்அழிந்துபோன கலை புத்துயிர் பெறுகிறது மாணவிகளுக்கு சாட்டைக்குச்சி நடனம்: அரசு பள்ளி ஆசிரியை அசத்தல்.
🔮இலங்கை முழுவதும் ராணுவம் ரோந்து செல்வதற்கான அரசாணை ஒன்றை அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென பிறப்பித்து உள்ளார். இது தமிழர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
🔮காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று 19 பேருடன் சென்ற சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

HEADLINES
🔮One series at home, one away more balanced format for WTC, says Virat Kohli.
🔮Italian coast guard recovers seven bodies of migrants off island.
🔮Narendra Modi thanks people for showing maturity after Ayodhya verdict.
🔮40 years after adoption, Danish man meets his biological mother in Chennai.
🔮Groundwater in Chennai up by 2.4 metres in four months.

No comments:
Post a Comment