காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
22-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்-682
அதிகாரம் : தூது
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
மு.வ உரை:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
கருணாநிதி உரை:
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.
சாலமன் பாப்பையா உரை:
அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
கற்பதற்குச்
சிந்திக்கும் திறனும் கற்பனை செய்வதற்கு எண்ணச் சுதந்திரமும் தேவை. இவ்விரண்டையும்
ஓர் ஆசிரியர் எளிதாகப் பயிற்றுவிக்க வேண்டும்.
-அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
அகல உழுகிறதை விட ஆழ உழு.
விளக்கம் : நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.
மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.
அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.
இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.
விளக்கம் : நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.
மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.
அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.
இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. From- ..லிருந்து
2. Up- மேலே /உயர
3. By- ஆல்/மூலம்
4. Under- கீழே
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. மனித உடலில் மிகவும் தூய்மையான இரத்தம் எங்குள்ளது ?
சிறுநீரகச் சிறை
2. இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் நகரம் எது ?
லூதியானா
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. சின்ன சின்ன சாத்தான், வயிறு பெருத்துச் செத்தான் - அது என்ன ?
பருத்திக்காய்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
தானியக்கீரை
🌿 தானியக்கீரை அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.
🌿 பின்னர் ஆசியாவில் முக்கியமாக இந்தியாவில் முதல் முதன் முதலாக இமயமலையில் உயரமான மற்றும் தாழ்வான பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌿இது வெப்பத்தை தாங்கி, வளரும் இயல்பை உடையது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
அடிமையான குதிரை
ஒரு குதிரைக்கும், கலைமானுக்கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண்ணியக் குதிரை ஒரு மனிதனின் உதவியை நாடியது. அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான்.
தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத்தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது. தன் கடிவாளத்தை நீக்கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டியது.
குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது. நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகையால் உன்னை விடுவிக்கவே மாட்டேன் என்று கூறிச் சிரித்தான்.
அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந்தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண்டியதாயிற்று.
நீதி :
பிறருக்கு கேடு நினைப்பவன் நிச்சயம் கெட்டுப்போவான்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.
🔮கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி பல்வேறு மத்திய அரசு துறைகளில் ஏழு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன என்று இன்று மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
🔮கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
🔮தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔮சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கணை இளவேனில் தங்கம் வென்றுள்ளார்.
🔮தமிழகத்தில் குமரி கடலோர கிராமங்களில் உலக மீனவர் தின கொண்டாட்டம்: கடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
HEADLINES
🔮Chandrayaan-2's Vikram hard landed within 500 metres of touchdown site, says govt.
🔮 India trying to convince U.S. that tapping into Indian talent is in mutual benefit: Jaishankar.
🔮R. Rajagopal sworn-in as Tamil Nadu Chief Information Commissioner.
🔮ISSF World Cup Finals: Manu, Elavenil win gold medals.
🔮HRD ministry hikes CBSE examination fee for class 10, 12.
No comments:
Post a Comment