காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
21-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 66
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மு.வ உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
கருணாநிதி உரை:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
மனதுடன் மல்யுத்தம் நடத்தாதீர்கள். தியானத்தின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்துங்கள். மகிழ்ச்சிக்கான வழி இதுவே.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.
பொருள்:
பொருள்:
மனது புண்பட்டிருக்கும் போது புகை விட்டு (புகையிலை) ஆற்றி கொள்ள வேண்டும்.
உண்மையான பொருள்:
புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.
மனது புண்பட்டிருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.
மனது புண்பட்டிருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1.In - உள்ளே
2.At- ல்
3.Over- மேலே
4.To- க்கு../..வரை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. குழந்தைகள் எத்தனை எலும்புகளுடன் பிறக்கிறது ?
300 எலும்புகள்
2. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற சிந்தாந்தத்தை உலகிற்கு தந்த முதல் விஞ்ஞானி யார் ?
சார்லஸ் டார்வின்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. பகலிலே வெறுங்காடு ; இரவெல்லாம் பூக்காடு - அது என்ன ?
வானம்
2. அனைவரையும் நடுங்க வைப்பான். ஆதவனுக்கே அடங்குவான் - அது என்ன ?
சூரியன்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
பொன்னாங்கண்ணி
🌱 பொன்னாங்கண்ணி கீரையானது, இந்தியா முழுவதும் காணப்படும் படர்பூண்டு வகையைச் சார்ந்தது.
🌱 எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட, சிறு இலைகளைக் கொண்ட, தரையோடு படர்ந்து வளரும். வெள்ளை நிற பூக்கள் பூக்கும்.
🌱பொன்னாங்கண்ணி கீரையை அறுத்து விட்டால் மறுபடியும் துளிர்த்து வளரு தன்மையுடையது.
🌱பொன்னாங்கண்ணி கீரையை அறுத்து விட்டால் மறுபடியும் துளிர்த்து வளரு தன்மையுடையது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
கருப்பங்கழி!
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.
ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா? என்றார்.
உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர் என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ அரசே! அவர் உங்களை அவமானப்படுத்துகிறார். அவர், எங்கள் அரசர் பலவீனமானவர். எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார் என்றார்.
இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார் என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான்.
அரசே! என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்? என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, நான் உன்னிடம் பிரியம் வைத்திருப்பதற்குக் காரணமே இதுதான் என்று புகழ்ந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச்சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
🔮இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார்.
🔮அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாக மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
🔮பீட்டா அமைப்பின் சார்பில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
🔮டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
🔮நாடு முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு : எந்த மதத்தினரும் அஞ்சத் தேவையில்லை என உத்தரவாதம்.

HEADLINES
🔮Sri Lanka President names elder brother Mahinda Rajapaksa as PM after Ranil Wickremesinghe resigns.
🔮NRC process to be carried out in entire country, says Amit Shah in Rajya Sabha.
🔮India, Singapore ink LoI on use of Integrated Test Range at Chandipur.
🔮The State government has announced that the hike in property tax rates for urban areas, which has been in force since April 2018, has been withheld.
🔮India lose 0-1 to Oman, almost out of contention for World Cup berth.

No comments:
Post a Comment