காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
15-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்-411
அதிகாரம் : கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
மு.வ உரை:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
கருணாநிதி உரை:
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
பள்ளியில் உள்ள நூலகங்கள் தான் அறிஞர்கள் வாழும் அன்பு இல்லங்கள், அங்கு எப்போதும் அறிவு என்னும் மணம் வீசிக்கொண்டே இருக்கும்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
பொருள்:
பொருள்:
மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள்.
உண்மையான பொருள்:
வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1.Button - பொத்தான்
2. Glove - கையுறை
3. Handkerchief - கைக்குட்டை
4.Skirt - பாவாடை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. இந்திய நெப்போலியன் யார் ?
சமுத்திர குப்தர்
2. அன்னை தெரஸா பிறந்த நாடு எது ?
அல்பேனியா
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. அடி மேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன ?
மிருதங்கம்
2. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் அழகாய் மணமணக்கும் . அது என்ன ?
சாம்புராணி
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
அரைக்கீரை
🌿 அரைக்கீரையானது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்த கீரை வகைகளில் ஒன்றாகும். இக்கீரை குத்துச் செடியாகப் படரும் தன்மையுடையது.
🌿 அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும் தன்மையுடையது.
🌿 செடியிலிருந்து கீரையைப் பலமுறை அறுவடைசெய்து பயன்படுத்துவதால் அறுப்புக்கீரை என்ற பெயரும் உண்டு.
🌿சுமார் ஒரு வருடம் வரை பலன்தரும். இக்கீரையின் மேல்நிறம் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
ஏழை இளைஞன்
ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார் தந்தை. மறுநாள் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞனை மகள் அழைத்து வந்தாள். அவனை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
இளைஞன் குழப்பத்தோடும், பரபரப்போடும் இருந்தான். அவன் பக்கத்தில் சில துடைப்பகுச்சிகள் சிதறிக் கிடந்தன. இளைஞன் ஒரு துடைப்பக் குச்சியை எடுத்து துண்டு துண்டாக உடைத்துக் கீழே போட்டான். பிறகு ஒவ்வொரு துடைப்பக் குச்சியையும் எடுத்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டான். சற்று நேரம் கழித்து செல்வந்தர் தன் மகளோடு அங்கே வந்து சேர்ந்தார். இளைஞனை நோக்கி உன்னைச் சோதிப்பதற்க்காகத்தான் இந்த துடைப்பக் குச்சிகளை இங்கே போட்டிருக்கிறேன். இவைகளை எடுத்து அதோ இருக்கும் துடைப்பத்தோடு சொருகி வைத்து இருக்கலாம். அல்லது இவற்றை ஒழுங்காக சேர்த்து பக்கத்தில் வைத்து இருக்கலாம்.
நீயோ, இவற்றை துண்டு துண்டாக உடைத்து ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் ஆக்கிவிட்டாய். நான் பாடுபட்டு சேர்த்த செல்வம் உன் கையில் கிடைத்தால் என்ன ஆகும்? இந்தக் குச்சிகளை உடைத்து வீணாக்கியதைப் போல என் செல்வத்தையும் வீணாக செலவு செய்து காலியாக்கி விடுவாய். அதனால் உன்னை நல்ல தகுதி உடையவனாக ஆக்கிக் கொண்ட பிறகு என்னை வந்து சந்தித்துப் பேசு என்றார். இளைஞன் தலை கவிழ்ந்தவாறு எழுந்து சென்றான். செல்வந்தரின் மகளும் தந்தை கூறிய நியாயத்தைப் புரிந்து கொண்டாள்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮அரசு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்றால் மின் கோபுரங்கள் அமைத்துதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
🔮இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
🔮இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் சிறந்த சாதனையாளர்களுக்கான டைம் பத்திரிகையின் 100 பேர் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
🔮இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட்.
🔮சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
🔮மராட்டிய மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
HEADLINES
🔮Toll rises in Australian wildfires with more danger ahead.
🔮Microsoft rolls out Windows 10 November 2019 update.
🔮China has developed the powerful long March 5 rocket to transport the probe to Mars in 2020.
🔮Dutee Chand named in TIME 100 Next list.
No comments:
Post a Comment