காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08-11-2019 -T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
08-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

பாட்டியின் புத்திசாலித்தனம்

குறள் :

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. 

விளக்கம் :

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். 
                                                      (அல்லது)

காலந்தவறாமல் காரியம் ஆற்றுவது ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் செயலாகும்.

கதை :

ஒரு ஊர்ல ஒரு வயசாண பாட்டி தனியா வசித்து வந்தாள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது. 

ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது. 

அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள். 

அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றாள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான். 

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள். 

மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டாள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒன்னும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான். 

மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

நீதி :
காலம் அறிந்து ஒரு அந்த இடத்தில் புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும். 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஒரு நாட்டின் தலையாய வளம் அந்நாட்டினரின் கற்பனைத்திறனும், புத்தாக்கத் திறனும் இணைந்து வெற்றி பெறும் மன உறுதியே ஆகும்.
 -அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.

விளக்கம் :
காகம் தனது குஞ்சு கருப்பாகவே இருந்தாலும் அதன்மீது அன்பு காட்டி இரைதேடி வந்து தன் அலகால் உணவூட்டும். ஆனால் மற்ற பறவையினங்கள் காகம் கருப்பாக இருப்பதால் சற்று அஞ்சி ஒதுங்கியே இருக்கும். அதனால் காகம் தனது குஞ்சை வெறுக்குமா? வெறுக்காது. அது தனது குழந்தை அல்லவா? அதைப்போல தனது பிள்ளைகள் என்னதான் அழகாக இல்லாவிட்டாலும் கூன் குருடு செவிடாகவே இருந்தாலும் ஒரு தாயானவள் அரவணைத்துப் பாதுகாப்பாள்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Tamarind - புளி
2. Custard apple - சீதாப்பழம்
3. Jack-fruit - பலாப் பழம்
4. Lemon - எலுமிச்சை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. காந்தி நடத்தி வந்த பத்திரிகை எது ?

யங் இந்தியா

2.இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

மூதறிஞர் ராஜாஜி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. கண் சிமிட்டும் ஒன்று:
    மணி அடிக்கும் மற்றொன்று:
    கண்ணீர் வடிக்கும் இன்னொன்று: அது என்ன ?

 மின்னல், இடி, மழை

2. அம்மா சும்மா படுத்தொஇருப்பாள். மகள் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருப்பாள். அது என்ன ?

 அம்மியும், குழவியும்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

பச்சைமிளகாய் 

🌶 கி.மு.7500ஆம் ஆண்டு காலத்தில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் மிளகாயை பயன்படுத்தத் தொடங்கினாலும், கி.மு.3500ஆம் வருடத்துக்குப் பிறகுதான் பயிரிடத் தொடங்கினார்கள்.

🌶 1493இல் மற்ற நாடுகளுக்கு கடல்வழியை கண்டுபிடிக்க கப்பலில் கிளம்பினார் கொலம்பஸ். அவர் கண்டெடுத்தவற்றில் மிளகாயும் ஒன்று.

🌶போர்ச்சுக்கல் மாலுமிகள் அரபிக்கடல் வழியாக கோவாவிற்கு வந்த போது தான் இந்தியாவில் மிளகாய் அறிமுகமானது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮 11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசில் செல்கிறார்.


🔮அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

🔮புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.

🔮சென்னைதமிழ்நாட்டில் 7 தொழில் நிறுவனங்களை விரிவாக்கம், கால நீட்டிப்பு செய்ய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

🔮ஏடிபி டூர் பைனல்ஸ் ஒரே பிரிவில் பெடரர், ஜோகோவிச்.


HEADLINES
🔮Trade war: China says it has agreed with U.S. to cancel tariffs in phases.

🔮Centre dispatches 4,000 armed personnel to Ayodhya ahead of the verdict.

🔮Kerala govt. to provide free Internet to over 20 lakh BPL families.

🔮Host India opt to field in must-win 2nd T20 game against Bangladesh.

🔮Lufthansa Airlines to slash 700-800 jobs over 'brutal competition'.

🔮Chennai Metro Rail provides free WiFi services to commuters in underground stations.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...