காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11-11-2019 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
11-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

துறவியின் அன்பு 

குறள்  எண்: 314, அதிகாரம்: இன்னா செய்யாமை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல். 

விளக்கம் :

தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள். 

கதை :

ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர். 

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார். 

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். 

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார், ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன். 

நீதி :


நமக்கு ஒருவர் தீமையை செய்தாலும் அவர்களுக்கு நாம் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும். 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

உங்களது சொந்த தனிப்பட்ட நிலையில் நீங்கள், உங்கள் செயல்களைச் செய்யும் போது குறிப்பிடத்தகுந்த மனிதராகி விடுகிறீர்கள்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
பொருள்
கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள்
'
கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.


🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1. Sunflower - சூரியகாந்தி
2. Hibiscus - செம்பருத்தி
3. Jasmine - மல்லிகை
4. Lotus - தாமரை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. உலகத்தின் கூரை எது ?

  பாமீர் பீடபூமி

2. உலகிலேயே பெரிய அரண்மனை எங்குள்ளது ?

  வாடிகன், இத்தாலி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. கால் உண்டு, நடக்க மாட்டான். 
    முதுகு உண்டு, வளைக்க மாட்டான்.
    கை உண்டு , மடிக்க மாட்டான் - அவன் யார் ?

   நாற்காலி

2. உச்சிக் கிளையிலே ஒரு முழக்குச்சி ஊசலாடுது. அது என்ன ?

 முருங்கைக்காய்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

சௌ சௌ

🍐 செள செள கொடிவகை தாவரங்களில் ஒன்று.

🍐 பெங்களூர் கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் செளசெளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்கள் மூலமாக இந்தியாவில் அறிமுகம் ஆனது. 


🍐 செள செள அதிக வெப்பநிலை நிலவக்கூடிய கடலோரப்பகுதியிலும், குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் பயிரிடப்படுகிறது.

🍐 சௌ சௌ பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. பெங்களூர், மைசூர் பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சென்னையில் காற்று மாசு காலை மாலை என இருவேளையிலும் பனி போல் படர்ந்து இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

🔮புல்புல் புயலால் சீற்றமுடன் காணப்படும் கடலில் மீன்பிடிக்க சென்ற 150 வங்காளதேச மீனவர்களை காணவில்லை.

🔮சையத் முஸ்தாக் அகமது அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.


🔮சிகாகோ நகரில் உலக தமிழ் சங்கம் சார்பில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது 'தங்க தமிழ் மகன்'விருது.

🔮மேற்கு வங்கத்தை புரட்டிய புல்புல் புயல்: பாதிப்புகள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தொலைப்பேசியில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி.

HEADLINES

🔮BJP not to form government in Maharashtra, blames Sena for disrespecting mandate

🔮Indian Railways' first private train Tejas Express posts Rs 70 lakh profit in first month.

🔮Cyclone 'Bulbul' helps better Kolkata air quality: Official


🔮Pakistan condemns restrictions in Kashmir on Eid-Milad-un-Nabi processions.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...