காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
27-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 104
அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
பொருள்:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
கேள்வி கேட்கும் மனமும்,
கற்பனை செய்யும் மனமும் பிரச்சினைகளைக் கண்டு
பயந்து விடாமல் தீர்வு கண்டு தடைகளைக்
கடந்து வெற்றி பெற வேண்டும்
என்ற விடாமுயற்சி வேண்டும்.
-அப்துல்கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
Diamond cuts diamond
முள்ளை முள்ளால் எடு.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. Jest - கேலி
2. Jester - விகடன், கோமாளி
3. Jew - யூதர்
4. Jot - சிறிதளவு
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. இலையானது பை போன்ற அமைப்பாக மாறியுள்ள தாவரத்தின் பெயர் எது ?
நெப்பந்தஸ்
2. தமிழ்நாட்டில் சுபாஷ்சந்திரபோஸ் வருகை புரிந்த ஊர் எது ?
மதுரை
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
1. The lion was going to attack the tiger.
2. My
aunt presented me a bicycle for my birthday.
3. We
used the subway to avoid the traffic.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
சர்க்கரை கொல்லி
சர்க்கரைக் கொல்லியானது சர்க்கரைக்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். இவை இனிப்பு உண்ண வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது.
இவை பரவலாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மலேஷியாவில் வளர்கிறது.
இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீகார் காடுகளில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசியா நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
கருப்புத்துணி
ஒரு தடவை முல்லா வியாபர நிமித்தமாகப் பெரிய நகரம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அங்கே அவருக்குத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுக்கு எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதையே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தான். அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான். இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான்.
அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவை கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்று தங்கினார். முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள். நான் காலையில் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் அடையாளம் கண்டு கொள்ள ஏதேனும் வழி உண்டா? என்று கேட்டான். அதற்கு முல்லா ஒரு கருப்புத் துணியை எடுத்து உமது ஒரு காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும். கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம் என்றார்.
சந்தேகப் பிராணி முல்லா கூறியதைப் போலவே, தன் காலில் ஒரு கருப்புத் துணியை கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த கருப்புத் துணியை அவிழ்த்து முல்லா தம்முடைய காலில் கட்டிக் கொண்டார். அவன் காலையில் எழுந்தவுடன், ஐயோ நான் காணாமல் போய் விட்டேன். என் காலில் இருந்த துணியைக் காணவில்லை என்று கூச்சலிட்டு கொண்டே அருகில் படுத்திருந்த முல்லாவின் காலைப் பார்த்து விட்டு நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் என்று சத்தம் போட்டான். முல்லா சிரித்துக்கொண்டே எழுந்து அந்த சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்கு தெளிவை உண்டாக்கினார்.
நீதி :
சந்தேகம் என்பது ஒரு பிரமை அதை நீக்கி தெளிவு பெற வேண்டும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேமிப்புக்கு பயன்படுத்தும் யோசனை - தமிழகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு.
🔮துருக்கியில் நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் 71வது குடியரசு தின விழா கோவில் மற்றும் பள்ளிவாசல்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
🔮சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் செத்து, பிழைப்பதாக அவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.
🔮குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து பஞ்சாபின் சில இடங்களிலும் வெட்டுக்கிளிகள் காணப்படுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
🔮நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
🔮எழும்பூர் உட்பட 5 ரயில் நிலையங்கள் ரூ109.55 கோடியில் மேம்படுத்தப்படும்: ரயில்வே பொதுமேலாளர் தகவல்.
HEADLINES
🔮Insurgency in Northeast down, says PM Modi in Mann ki Baat.
🔮Anti-satellite missile capability showcased in R-Day parade.
🔮Two Sri Lankan women receive Padma awards for contribution to arts, language teaching.
🔮Coronavirus: Death toll in China rises to 56, over 600 new cases detected.
🔮The Indian team recorded their second victory in the 20-over match against New Zealand.
🔮The Indian team recorded their second victory in the 20-over match against New Zealand.
No comments:
Post a Comment