காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10-01-2020 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
10-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 550
அதிகாரம் : செங்கோன்மை

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
 களைகட் டதனொடு நேர்.

பொருள்:

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வெற்றி நமது வாழ்வில் இருந்து கொண்டே இருக்கும்,  தோல்வியின் போது அதிலிருந்து சில முக்கியமான பதில் தான் நமக்கு கிடைக்கும். அதை வெற்றிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ண வேண்டும். தோல்வி பயம் தேவையற்றது.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
Better be alone than in bad company
ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Fund - மூலதனம்
2.  Funnel - புனல், புகை போக்கி
3. Frontier - எல்லைப் பகுதி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது ?

 மயிலாப்பூர்

2. சிறிய இதயம் கொண்ட மிருகம் எது ?

 சிங்கம்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The Island was without any animal life.
2. The teacher announced the winner of the competition.
3. The girl applied cream on her face.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

லிச்சி பழம் 

🍓 லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். லிச்சிப்பழம் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது.

🍓 சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.

🍓லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போன்று மூடப்பட்டு, அதனுள் வெள்ளை நிறத்தில் பழம் இருக்கும்.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

பேராசை பெரும் நஷ்டம்

முல்லா ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை கடனாக கேட்டார். பக்கத்துக் வீட்டுக்காரர் கொடுக்க மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார். அடுத்த நாள் காலையில், உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது. நேற்று பிரசவம் முடிந்து, உங்கள் பானை ஒரு குட்டி பானையை ஈன்றெடுத்தது எனச்சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக இருந்தாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்துவிட்டார். அதே போல் மீண்டும் அவரிடமிருந்து ஒரு பெரிய பானையை கடனாக வாங்கி மறுநாள் அதே போல் அந்த பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப்பானை ஒன்றைக் கொடுத்து அந்த பெரிய பானைக்கு புதிய குழந்தை பிறந்திருக்கிறது என்று கொடுத்தார்.

அதனை பெற்றுக்கொண்ட பக்கத்துவீட்டுக்காரர் சந்தோஷம் அடைந்தார். அதற்கடுத்த வாரம் முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம், பானையை கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையைக் கொடுத்தார். இம்முறை முல்லா பானையை திருப்பி தரவில்லை. பக்கத்துவீட்டுக்காரர் முல்லாவிடம் போய் கேட்டார். அதற்கு முல்லா மன்னிக்க வேண்டும். உமது பானை பிரசவத்தின் போது இறந்து விட்டது என்றார். உடனே பக்கத்து வீட்டுக்காரர் என்னை ஏமாற்ற பார்க்கிறாயா? என்று கேட்டார். அதற்கு முல்லா நான் ஏமாற்றவில்லை. பானை கர்ப்பமாக இருந்து குட்டிப் போட்டது என்று நான் உங்களிடம் குட்டிப்பானையை கொடுத்தபோது வாங்கி கொண்டீர்கள் அல்லவா? என்றார். அது உண்மை என்றால் இப்போது பானை இறந்தது என்பதும் உண்மை என்றார். பக்கத்து வீட்டுக்காரர் எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து சென்றார்.

நீதி :
பேராசைப்பட்டால் நஷ்டம் தான் மிஞ்சும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮பல்வேறு சாதனைகளுக்காக தமிழக அரசுக்கு, விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

🔮காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

🔮குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில் தற்போது தேர்வில் முதல் 35 இடங்களை பெற்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

🔮மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து, சாய்னா வெற்றி பெற்றனர்.

🔮பிப்.யில் மத்திய பட்ஜெட் தாக்கல்?: நாட்டின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

🔮உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம்  9 மாவட்டங்களில் நீட்டிப்பு, மறைமுகத் தேர்தல்: 11 சட்ட திருத்த மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்

HEADLINES
🔮JNU students demand removal of V-C, stopped from marching towards Rashtrapati Bhavan.

🔮Court directs Tihar authorities to provide treatment at AIIMS to Bhim Army chief.

🔮Seven-year-old from Hyderabad develops nutrition app on healthy eating habits.

🔮IIT-Madras graduate donates Rs 1 crore for robotics research lab.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...