காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
09-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 641
அதிகாரம் : சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
பொருள்:
நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
நம்முடைய
இலட்சியத்தில் வெற்றிபெற உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் இருக்க வேண்டும். அப்போது தான்
வெற்றியும் அதிகம் கிடைக்கும்.
-அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
A little
learning is a dangerous thing
அரை குறை படிப்பு ஆபத்தானது
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. Fable - கட்டுக்கதை
2. Fence - வேலி
3. Fern - பரணிச் செடி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. மாரத்தான் ஓட்டப்பந்தயம் எத்தனை மைல் தூரத்தைக் கடப்பதாகும் ?
26 மைல்
2. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற ஊர் எது ?
அலங்காநல்லூர்
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
1. The class was full of fun and activity.
2. I saw an advertisement on television.
3. Most people are afraid of snakes.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
முலாம்பழம்
🍈 முலாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பழவகைகளுள் முக்கியமானது.
🍈 முலாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும். இதனை கிர்ணிப்பழம் என்றும் அழைப்பர்.
🍈 சீனா இப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
குழப்பவாதிகள்
ஒரு முறை முல்லா நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள் என்று சொன்னதை மன்னரிடம் போய் கூறினார்கள். உண்மையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.
பிறகு முல்லாவை நோக்கி, அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே என்றும், அப்படியானால் இவர்கள் குழப்பவாதிகள் என்று நிரூபித்துக் காட்டுங்கள் என்றார். முல்லா அரசரிடம், என்னால் நிரூபிக்க முடியும் என்றார். அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.
பின்னர் அவர்களிடம், அறிஞர் பெருமக்களே... நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க போகிறேன். அவர்களிடம் அதற்குரிய பதிலை, இந்த தாளில் பதில் எழுதிக் கொடுக்கவேண்டும் என்றார்.
முல்லா, அறிஞர்கள் அனைவரிடமும் ரொட்டி என்றால் என்ன? என்று கேட்டார். அனைவரும் பதிலை தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார். ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார். இரண்டாமவர்- ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார். மூன்றாமவர்- இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி. நான்காமவர்- ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள். ஐந்தாமவர்- ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு. ஆறாமவர்- அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி. ஏழாமவர்- ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது, என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.
அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, அரசே..! "ரொட்டி என்ற ஒரு சாதாரண கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகவில்லை பார்த்தீர்களா? இதனால் தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார். அரசர் முல்லாவின் அறிவாற்றலை பார்த்து வியந்து அவர்மீது இருந்த குற்றச்சாட்டினை தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
🔮ஈரான் விவகாரத்தில் இந்தியா முன்னெடுக்கும் எந்த ஒரு முயற்சியையும் வரவேற்கத் தயார் - ஈரானிய தூதர் அலி செகினி.
🔮2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள்: மாதவரம்-தரமணி இடையே 21 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை.
🔮பட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு 32 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து மாணவன் சாதனை படைத்தார்.
🔮இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக மிக வேகமாக 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
🔮இந்தியாநாட்டின் முக்கிய பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.
HEADLINES
🔮Workers, bank staff, students go on strike against government’s labour policies, CAA
🔮Amid dismal economic scenario, PM Modi meeting honchos for ‘honest feedback.
🔮Iran-U.S. unrest updates: Iraqi PM received word from Iran about missile attack.
🔮India's first indigenous aircraft carrier Vikrant likely to be commissioned by early 2021: Sources
🔮Iran crisis: DGCA asks airlines to reroute Middle-East flights to ensure passenger safety.
No comments:
Post a Comment