காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
25-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 492
அதிகாரம் : இடனறிதல்
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
பொருள்:
வரும் பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒரு போதும் தன் கடமையை நிறுத்துவதில்லை.
- நம்மாழ்வார்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
Every pleasure has a pain.
எல்லா இன்பத்துக்கும் பின்னால் ஒரு துன்பம் இருக்கும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Lance - ஈட்டி
2. Lane - சந்து, முடுக்கு
3. Largo - மெல்லிய இசை
4. Lark - வானம்பாடி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிதி ஆயோக் (NITI Aayog)
2. ”நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு” எங்கு நடைபெற்றது ?
டர்பன்
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
1. We have a balcony in our house
2. He started going bald in his twenties.
3. We decorated our house with balloons for the
party.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
கீழாநெல்லி
கீழாநெல்லி ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். செடி முழுவதும் மருத்துவப் பயன்பாடு உடையதாகும்.
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் ஓராண்டுத் தாவரமாகும்.
இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்க்காய்நெல்லி எனவும், பேச்சு வழக்கில் கீழ்வாய்நெல்லி, கீழாநெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
முல்லாவின் மேடைப்பேச்சு
முல்லாவை ஓர் அறிஞர் என்றும், உலக அனுபவம் மிக்கவர் என்றும் மதித்து அவரது ஊர் மக்கள் அவரை பாராட்டுவதை பார்த்து முல்லா மீது பொறாமைபடுபவர்கள் ஒரு சதி திட்டம் தீட்டினர். முல்லாவை ஒரு பெருங்கூட்டத்திற்கு பேச அழைத்து அவரால் பதில் சொல்ல இயலாத கஷ்டமான வினாக்களை எழுப்பி, அவர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவதை பார்க்க ஆசைப்பட்டனர்.
அவர்கள் ஒரு நாள் முல்லாவிடம் சென்று, முல்லா அவர்களே! தங்களுடைய அரிய உபதேசங்களைக் கேட்க வேண்டும் என்று எங்கள் பகுதி மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்காக தாங்கள் ஒரு தடவை எங்கள் பகுதிக்கு வந்து எங்களுக்கெல்லாம் அறிவுரை கூற வேண்டும் என்று கேட்டனர். முல்லாவும் அவர்கள் குறிப்பிட்ட நாளில் வருவதாக வாக்குறுதி அளித்தார். முல்லாவிடம் தாறுமாறாக கேள்விகளை கேட்பதற்கென்றே சில குழப்பவாதிகளை வரவழைத்திருந்தார்கள். முல்லா குறித்த நேரத்தில் கூட்டத்திற்கு வந்தார். கம்பீரமாக மேடை மீது ஏறி, அன்பார்ந்த தோழர்களே! இன்று இங்கு நான் என்ன பேச இருக்கிறேன் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார், முல்லா. எங்களுக்கு தெரியாது எனக் கூட்டத்திலிருந்தவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.
உடனே முல்லா, நான் என்ன பேச போகிறேன் என்பதை கூட தெரிந்து வைத்திராத அப்பாவிகளுக்கு மத்தியிலே நான் என்ன பேசினாலும் விளங்காது. நான் வருகிறேன் என்று கூறியவாறு முல்லா மேடையை விட்டு இறங்கி சென்றுவிட்டார். முல்லா தந்திரமாக சமாளித்து சென்று விட்டதைக் கண்டு ஏமாற்றமடைந்த எதிர்ப்பாளர்கள் மீண்டும் முல்லாவின் வீட்டுக்கு சென்று கூட்டத்திற்கு வருமாறு வற்புறுத்தினார்கள். அவர்களுடைய நச்சரிப்புத் தாளாமல் இரண்டாவது முறையாகக் கூட்டத்திற்கு சென்றார் முல்லா. மேடை ஏறியதும், அன்பார்ந்த நண்பர்களே! இப்போது இங்கே நான் என்ன பேச இருக்கிறேன் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்று முல்லா மக்களைப் பார்த்துக் கேட்டார். எங்களுக்கு தெரியும் என்று பதிலளித்தனர். நான் என்ன பேச இருக்கிறேன் என்பது முன்னதாகவே உங்களுக்கு தெரிந்திருக்கும்போது, மறுபடியும் எதற்காக நான் பேச வேண்டும்! என்று கூறிவிட்டு முல்லா புறப்பட்டுச் சென்று விட்டார்.
இரண்டாவது தடவையும் முல்லா ஏமாற்றி சென்று விட்டதைக் கண்ட எதிர்ப்பாளர்கள் மூன்றாவது தடவை எப்படியாவது முல்லாவை அழைத்து வந்து திட்டமிட்டு அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுவது என்று முடிவு கட்டினார்கள். மூன்றாவது தடவையும் முல்லாவிடம் சென்று அவரை வற்புறுத்தி கூட்டத்தில் பேச அவருடைய அனுமதியை வாங்கி விட்டார்கள். மூன்றாவது தடவையாக முல்லா மக்கள் முன்னால் மேடையில் ஏறி நின்றார். அன்பார்ந்த மக்களே! இங்கே நான் என்ன பேசப் போகிறேன் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்று முல்லா வழக்கமான தனது கேள்வியைக் கேட்டார். எங்களில் பாதிப் பேருக்கு நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பது பற்றித் தெரியும். பாதிப் பேருக்குத் தெரியாது என்று மக்கள் சாமர்த்தியமாக பதில் சொன்னார்கள். அப்படியா? மிக்க மகிழ்ச்சி. நான் என்ன பேசப் போகிறேன் என்று தெரிந்து வைத்திருக்கும் மக்கள் தெரியாதவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லி விடுங்கள். நான் எதற்காக வீணாகப் பேச வேண்டும் என்று கூறி விட்டு கீழே இறங்கி சென்று விட்டார். மூன்றாவது முறையும் மிகச் சாதுரியமாகப் பேசி முல்லா தங்களை ஏமாற்றி விட்டதைக் கண்ட அந்த மக்கள் வெட்கமடைந்தார்கள்.
அதற்கு பிறகு அவர்கள், முல்லாவின் விஷயத்தில் எதிர்ப்பு காண்பிப்பதை விட்டு மற்ற எல்லோரையும் போலவே முல்லாவை புகழ தொடங்கினார்கள்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮கனடாவில் தமிழக மாணவி ராச்சல் ஆல்பெர்ட் தாக்கப்பட்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
🔮பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருது பெற்ற மாணவர்களிடம் பிரதமர் மோடி நேரடியாக உரையாடினார்.
🔮3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
🔮டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
🔮குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ இந்தியா வந்தடைந்தார்.
🔮நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
HEADLINES
🔮Not just tax evasion, excessive tax is also social injustice: CJI Bobde.
🔮School students in Chhattisgarh to discuss Constitution every Monday.
🔮First T20I: Shreyas Iyer fireworks, KL Rahul onslaught give India six-wicket win over New Zealand.
🔮Elephant scare shuts down schools in Korei block of Odisha's Jajpur district.
🔮DLF, backed by GIC, to invest ₹5,000 cr. to develop IT park.
No comments:
Post a Comment