காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13-01-2020 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
13-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 828
அதிகாரம் : கூடாநட்பு

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 
 அழுதகண் ணீரும் அனைத்து.

பொருள்:

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

தன் குற்றத்தை சுண்டைக்காயாகவும், பிறர் குற்றத்தை பூசணிக்காயாகவும் பார்ப்பது கூடாது.
 - பாரதியார்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
Beauty is but skin deep
புற அழகு அழகல்ல, அக அழகே அழகு
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Galaxy - விண்மீன் கூட்டம்
2. Gale - புயல் காற்று
3. Gallon -  முகத்தல் அளவை
4. Gallows - தூக்குமரம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

 ஜனவரி 12

2. யாருடைய பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம் ?

 சுவாமி விவேகானந்தர்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The ambulance is on the way.
2. Follow your doctor's advice.
3. He is a video game addict.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !


பீச் (குழிப்பேரி) (peach)

🍑 குழிப்பேரி சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவரமாகும்.

🍑 இது இனிப்பு செறிந்த பழங்களை விளைவிக்கிறது.

🍑 இப்பழம் ஆப்பிள் பழத்தினை ஒத்த தோற்றமும், குணத்தையும் கொண்ட பழமாகும்.

🍑பீச் பழங்கள், ஸ்டோன் பழங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

சூரியனா அல்லது சந்திரனா?

அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்த பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால் தான் உலகத்திற்கு அதிகப்பயன் உண்டு என்ற கருத்தை முன் வைத்தனர்.

முல்லா உடனே எழுந்து, அறிஞர் பெருமக்களே, இங்கு நடந்த பட்டிமன்றம் தொடர்பாக என் கருத்தைக் கூறலாமா? என்று கேட்டார். முல்லாவிடம், உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்றனர். 

முல்லா, சூரியனைவிடச் சந்திரனால் தான் உலகத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்றார். அது எவ்வாறு என்று அறிஞர்கள் கேட்க, பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்கு தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்குத் தேவையான ஒளியை இரவிலே தருகிறது. அதனால் சந்திரனால் தான் நமக்கு அதிகப்பயன் என்றார். முல்லா தங்களை கேலி செய்கிறார் என்பதை உணர்ந்த அறிஞர்கள் அனைவரும் சிரித்து விட்டார்கள்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

🔮தமிழகம் மற்றும் தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

🔮21-ம் நூற்றாண்டில் இளைஞர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

🔮ஈராக்கில் மீண்டும் ஒரு தளபதியை மர்ம நபர்கள் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

🔮கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

🔮ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகினார்.

🔮இந்தியாபொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து.

HEADLINES
🔮New Army Chief has drawn a clear distinction between Constitution and govt. of the day.

🔮Maradu apartments demolition: Golden Kayaloram demolished, all four apartments brought down.

🔮Central schemes: Modi takes a dig at Mamata; CM gives event a miss.

🔮Pak FM Qureshi embarks on visit to Iran, Saudi amidst regional tension.

🔮India to acquire 200 fighter jets for Air Force: Defence Secretary


🔮India finish 2019 as number one shooting nation in world.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...