காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01-02-2020 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
01-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 702

அதிகாரம் : குறிப்பறிதல்

 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் 
 தெய்வத்தோ டொப்பக் கொளல்.

பொருள்:

ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

குழந்தைகளும் இளைஞர்களும் தான் வருங்கால ஓவியங்கள். அவர்களே 

நாளைய நம் எதிர்பார்ப்புகள்.

 -அப்துல்கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

Fortune knocks but once

சந்தர்ப்பங்கள் எப்போதும் கதவை தட்டாது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Mirth - குதூகலம்
2. Misdeed -  குற்றம்
3. Miser - கஞ்சன்
4. Misery - வறுமைக்கோடு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்தியது?

 2010 ஏப்ரல் 1 

2. உலக காடுகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

 மார்ச் 21

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. Kumar's aim is to win the race.
2. The arrow missed its target.
3. I was ashmed about lying to my friends.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

மரிக்கொழுந்து

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும்.

இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.

மாலைகளிலும் மலர் செண்டுகளிலும் இலைகள் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக் , புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

சோம்பேறிகள் எத்தனை பேர்

ஒரு நாள் சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா ஏறி நின்று கொண்டு, முல்லா, மக்களைப் பார்த்து, அன்பார்ந்த நண்பர்களே! உங்களில் எத்தனை பேருக்கு உடல் உழைப்பு இல்லாமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ வேண்டுமென்று ஆசைபடுகிறவர்களுக்கு நான் ஒரு வழி சொல்கிறேன். யாரெல்லாம் என்னுடைய யோசனைகளைக் கேட்க தயாராக இருக்கிறீர்களோ அவர்கள் மட்டும் கைதூக்குங்கள் என்றார், முல்லா. அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள்.

முல்லா தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். என்ன முல்லா அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே? என்று மக்கள் கேட்டனர்.

நண்பர்களே! நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள் தான் என்ற உண்மை எனக்கு தெரிந்துவிட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை? போய் வருகிறேன் என்று கூறியவாறே முல்லா செல்லத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக முல்லா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நீதி :
உழைத்து வாழ வேண்டும். சோம்பேறிகளாக இருக்கக்கூடாது.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை என சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய சந்திரசேகரன் என்ற தமிழக மாணவர் கூறியுள்ளார்.

🔮குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை: தொடர்ந்து போராடுவேன் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி.

🔮உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவுவதால், இந்திய பொருளாதாரத்திலும் மந்த நிலை நிலவுவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் அவசர நிலையை அறிவித்து உள்ளது.

🔮நியூசிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

🔮பாராளுமன்ற பட்ஜெட் தொடர்  தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற இரு சபைகளின்  கூட்டுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

🔮ரஷியாவில் நடுக்கடலில் சிக்கிய 600 மீனவர்கள்.ரஷியாவின் காம்சட்கா தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓகோட்ஸ்க் கடல் உறைந்து பனிக்கட்டியாகி உள்ளது.

HEADLINES
🔮Nirbhaya case: Delhi court defers execution of convicts until further orders.

🔮374 Indians to fly home from coronavirus-hit Wuhan on February 1.

🔮Australian Open | Dominic Thiem beats Alexander Zverev to reach final.

🔮NZ vs IND fourth T20I: India beats Kiwis again via Super Over to take 4-0 lead.

🔮Highlights of CEA Subramanian press meet on Economic Survey: from 'wealth creation' to ‘Thalinomics'.

🔮Two years on, Alandur foot over-bridge awaits opening.

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31-01-2020 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
31-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 616

அதிகாரம் : ஆள்வினையுடமை

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
 இன்மை புகுத்தி விடும்.

பொருள்:

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
Every heart hath its own ache. 
தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Mechanics - இயந்திரவியல்
2. Melon - முலாம்பழம்
3. Memo - செய்திக் குறிப்பு
4. Menial - வீட்டுப் பணியாள்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தண்டமிழ் ஆசான் - என்று பாராட்டப் பெற்றவர் யார் ?

 சீத்தலைச் சாத்தனார்

2. திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்  ?

 ஐம்பத்து மூவர்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The river is shallow.
2. The children walked across the road.
3. Put the ladder against the wall.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

துளசி

துளசி என்பது ஒரு மூலிகைச் செடியாகும். மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் துளசியின் தாயகம் இந்தியா. அதன் பின் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு பரவியது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படுகிறது.

ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.

வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கம் நம் நாட்டில் உண்டு.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

இரண்டு புலிக்கு எங்கே போவேன்?


ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான்.பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.
தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள்.அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள்.அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள்.
சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள்.நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.
குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.
இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது.ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.
நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.
இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.
அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.
அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.
கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.
இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.
வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது.பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

🔮ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்.

🔮நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படுவதையொட்டி திகார் சிறையில் நாளை ஒத்திகை நடைபெற உள்ளது.

🔮புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி நாளை 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

🔮கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

🔮ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்.

🔮சாலை விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சைத் திட்டத்துக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்: நிதின் கட்கரி வேண்டுகோள்.

HEADLINES
🔮Kunal Kamra was not unruly, says IndiGo pilot who flew the comedian.

🔮Coronavirus outbreak: China assures India of cooperation in epidemic prevention and control.

🔮Australian Open | Djokovic beats Federer to reach final.

🔮Jamia firing: Amit Shah directs Delhi police chief to take strictest action.

🔮Budget 2020: 7 key changes brought by Modi government since 2014.

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30-01-2020 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
30-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 700

அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்

 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 

 கெழுதகைமை கேடு தரும்.

பொருள்:

யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஒரு நாட்டின் வரலாற்றில் தனித்துவமான பக்கத்தை உருவாக்கியதற்காக, நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவீர்கள்.
 - அப்துல்கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

Forget and forgive.
மறப்போம் ! மன்னிப்போம்!
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Marvel - வியப்பு, அற்புதம்
2. Mast - கப்பலின் பாய்மரக் கம்பு
3. Meantime - இடைப்பட்ட நேரம்
4. Measles - அம்மை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தொண்டு செய்த பழுத்த பழம் என்று பாரதிதாசன் யாரைப் போற்றுகிறார்?

 தந்தை பெரியார்

2. பாரதியார் யாருடைய சாயலில் வசன கவிதை எழுதிட தொடங்கினார் ?

 வால்ட்விட்மன்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The banyan tree is the National trees of India.
2. The plumber worked with an iron bar.
3. There is a tree on the river bank.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

திருநீற்றுப் பச்சிலை

திருநீற்றுப் பச்சிலை, தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட மூலிகையாகும்.


தற்போது பிரான்ஸ், இந்தோனேஷியா, மொராக்கோ, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது.

இது திருநீற்றுப் பத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உலகில் சிறந்தது

மன்னரிடம் சில காலம் முல்லா அமைச்சராக இருந்தபொழுது, முல்லாவை எப்போதுமே மன்னர் தன்னுடனே வைத்துக் கொண்டு உரையாடி மகிழ்வார். மன்னர் உணவருந்தும் சமயத்தில் எல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம் போல அருகருகே அமர்ந்து உணவருந்தினார்கள். அப்போது மன்னர் முல்லாவை நோக்கி, முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று நான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார்.

முல்லா ஆமாம் மன்னா! அவற்றையே நானும் நினைக்கிறேன் என்றார். உடனே மன்னர் சமையற்காரனை அழைத்து, இனிமேல் அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு என்று உத்திரவிட்டார். நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. அன்றைய தினம் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும் பீன்ஸ் பரிமாறப்பட்டது. மன்னர் முல்லாவை நோக்கி உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்று தான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார். ஆமாம் மன்னா! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்ததில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸை போன்ற காயைக் கண்டதே இல்லை என்றார் முல்லா.

என்ன முல்லா? பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றீர்கள். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே என்று மன்னர் கேட்டார். முல்லா சிரித்துக் கொண்டே மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா! வேலை பார்க்கிறேன்.

நீதி :

மனமானது மாற்றத்தை விரும்பக்கூடியது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

🔮கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

🔮ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி டொமினிக் தீம் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

🔮நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியின் சூப்பர் ஓவரில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

🔮ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார் நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை குற்றவாளி வினய் சர்மா.


🔮கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



HEADLINES

🔮Nirbhaya case: another convict Vinay Kumar Sharma files mercy plea.

🔮Refrain from China travel: Health Ministry.

🔮India beat New Zealand in Super Over to take an unassailable 3-0 lead in T20 series.


🔮Got call from Embassy, might be evacuated soon: Indian student in Wuhan Uni amid Coronavirus scare.

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29-01-2020 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
29-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 464

அதிகாரம் : தெரிந்து செயல்வகை

 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் 
 ஏதப்பாடு அஞ்சு பவர்.

பொருள்:

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். 
 -ஜார்ஜ் பெர்னாட்ஷா

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
First try and then trust.
முயற்சி திருவினையாக்கும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Mariner - மாலுமி
2. Mark - ஜெர்மன் நாட்டு நாணயம்
3. Marshal - தளபதி
4. Mart - சந்தை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர் யார் ?

 கார்ல் மார்க்ஸ்

2. தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்படும் நாள் எது ?

 நவம்பர் 19

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. All children should balance work and play.
2. My mother baked a cake for my birthday.
3. My sister has a bag with Tom and Jerry picture on it.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

திப்பிலி

திப்பிலி எனும் பல பருவத்தாவரமானது பைபிரேசியே (Piperaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் கொடி ஆகும். 

இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது அதிகமாக பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது. பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.

திப்பிலி பல மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும்.

திப்பிலி ஓர் முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மசாலாவாக திகழ்கிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

பத்தாவது பாஸ்


நாதஸ்வரம் மற்றம் மேளதாளத்துடன் பாண்டித்தேவரும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.
அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.
ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா
“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.
“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”“ஆமாம்”“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”“ஆமாம்”“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”
இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர்இவனும் ஓயாமல் பொய் சொன்னான்.“ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர்.ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.
அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.பாண்டித்தேவர் வசதியானவர் என்று சொல் முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார்.
ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள். இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு.
அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான்.இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டித்தேவர்.
“நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர்.
பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.“பாண்டித் தேவர் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார் பாண்டித்தேவர்.
“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு.பாண்டித்தேவருக்குப் பெருமையாக இருந்தது.அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வருகை தரும்படி முதல் அமைச்சர் பழனிசாமிக்கு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

🔮குரூப்-4 தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

🔮சுகாதாரத்துறையை பொது பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்துரு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது; கண்டிப்பாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

🔮கொரோனா வைரசை கணிக்கத் தவறி விட்டோம் என்று உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

🔮ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.


🔮டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்.

HEADLINES

🔮14-day quarantine mandatory for Indians evacuated from China: Indian Embassy.

🔮Indian environmental economist Pavan Sukhdev wins Tyler Prize for 'green economy' work.

🔮No problem with PCB hosting Asia Cup, but India won't play in Pakistan: BCCI.


🔮U.S. air crash in Afghanistan may have killed top CIA official: Iranian media.

🔮CHENNAI ,Those dumping medical waste into lakes must be dealt with seriously, says National Green Tribunal.

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...