காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 31-10-2019 - T.தென்னரசு

காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
31-10-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள் :969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 

விளக்கம் :

தன் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்தாலும் உயிர் துறக்கும் கவரிமானைப் போல, தன் பெயருக்கு இழுக்கு நேர்ந்தால் சாண்றோர்கள் தன்னுயிரையே மாய்த்துக் கொள்வார்கள். 

குறள் விளக்க கதை :

மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான். 

ஆனால் அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 

வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். 

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார். 

இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான். 

நீதி :
எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும். 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம் .
விளக்கம் :
ஒருவர் ஒரு தவறு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அந்த தவறை சுட்டிக் காட்டவில்லையென்றாலும் வேறு ஒருவர் அந்த தவறை செய்திருப்பார். அதைபற்றி நாம் பேசினாலும் இவரைப் பற்றிதான் சொல்கிறோம் என்று சில நேரங்களில் சண்டைக்கு வருவதுண்டு. அதாவது வேறு விதமாக ஒருவர் ஒரு தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்றால் வேறொருவர் தான் செய்த வேறொரு தவறை நினைத்து பயப்படுவதை இந்த பழமொழியை உபயோகித்து கூறலாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Sister-in-law - மைத்துனி
2. Son-in-law - மருமகன்
3. Family - குடும்பம்
4.Friend - நண்பன்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. சீனாவின்  புனித விலங்கு எது ?

 பன்றி

2. பிரமிடுகளின் பிறப்பிடம் எது?

எகிப்து

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. காட்டில் தொங்கும் பொட்டலம். காவல் நிறைந்த பொட்டலம். அது என்ன?
தேன்கூடு
3. காட்டிலே இருக்கிற கண்ணம்மாள், வீட்டை சுத்தப்படுத்துகிறாள் . அவள் யார்?
துடைப்பம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

பீன்ஸ் 

🍊 பீன்ஸ் கொடிவகையான காய்கறி வகையாகும். தென் அமெரிக்க நாடான பெருவை பூர்விகமாகக் கொண்டது. பின்னர் ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்குப் பரவியது. 

🍊 இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஐரோப்பியர்களால் அறிமுகமான காய்கறிகளின் ஒன்று பீன்ஸ். இன்று சீனா, இந்தோனேஷியா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் பீன்ஸ்  உற்பத்தி செய்கிறது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு.

🔮அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

🔮வங்காளதேச அணி பங்கேற்க சம்மதம்: இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - கொல்கத்தாவில் நடக்கிறது.

🔮திருவள்ளூர்: கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் அதிகநீர் திறக்க வாய்ப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை.

🔮தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை.

🔮 கனமழை எதிரொலி: மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.

HEADLINES
Terrorism in Kashmir is not just India’s problem, say European lawmakers.
🔮No more queues for check-in bag screening at Chennai International Airport.
🔮Cyclone Kyarr: Kerala to get heavy rain for next two days, 'orange' alert issued for Thiruvananthapuram.
🔮This Rajasthan cop built a school to educate 450 children who used to beg on streets.
🔮TN, Pondy brace for heavy rains as depression likely to escalate into deep depression.


No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...