காலைவழிபாட்டுச் செயல்பாடுகள்
22-10-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்
குறள்எண்- 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
மு.வ உரை:
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.
கருணாநிதி உரை:
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
நம்மை அனைவரும் நினைவு கூறும் வகையில் ஒரு பெரும் செல்வத்தை நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் உரிமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி
விளக்கம் :
முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Archery - வில்வித்தை
2. Badminton - பூப்பந்து
3. Boxing - குத்துச்சண்டை
4. Dice - பகடை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. உலக மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 8
2.சத்தம் போடாத விலங்கு எது?
ஒட்டகச் சிவிங்கி
மார்ச் 8
2.சத்தம் போடாத விலங்கு எது?
ஒட்டகச் சிவிங்கி
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1 .மூன்று பெண்களுக்கும் ஒரே முகம். மூத்தப் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?
முதலை, உடும்பு, பல்லி
2. ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய்க் கடை. அது என்ன?
தேன்கூடு

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
கத்தரிக்காய்
🍆 வழுதுணை என இலக்கியங்களில் சுட்டப்படும் கத்தரிக்காய் தென்னிந்தியப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது.
🍆 கருநீலம், இளம் பச்சை நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது.
🍆 உருண்டை, நீள் உருண்டை வடிவங்களில் காய்கள் உற்பத்தியாகின்றன.
🍆 சில வகை கத்தரிக்காய்களில் சிறிதளவு கசப்பு இருக்கும்.
🍆 கத்தரிக்காயின் தோல், சதைப்பகுதி , விதைப்பகுதி என முற்றாத அனைத்து பகுதிகளும் உண்ணப்படுகின்றன.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
யார் ஏழை?
ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளை கிராமத்தை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். இரண்டு நாள் ஒரு குடிசையில் ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க. திரும்ப வரும் போது, அப்பா கேட்டார்,
ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே? மகன் சொன்னான் ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு. ஆனால் அவங்க கிட்ட நாலு இருக்கு.
நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல், கார்டன்ல நடுவிலே இருக்கு. ஆனால் அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது. நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம். ஆனா அவங்க வீட்டை ரெயின்போ அழகு படுத்துது... நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது. ஆனால் அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன தூரம் வரை அவங்க எல்லை.
நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம். ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க. நம்மை பாதுக்காக்குறதுக்கு நம்மை சுற்றி சுவர் மட்டும் தான் இருக்கு... ஆனால் இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க.. அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வைத்ததற்கு நன்றி அப்பானு சொன்னான். அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.
(விவசாயிகள் என்றும் ஏழ்மையான பணக்காரார்கள்)
(விவசாயிகள் என்றும் ஏழ்மையான பணக்காரார்கள்)
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
சுனாமி வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள கடலின் ஆழத்தை வரைபடமாக்கும் முயற்சியில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் ஈடுபட்டு உள்ளது.
🔮இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் என ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
🔮2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.
🔮தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 22 ஆம் தேதி "ரெட் அலெர்ட்" எச்சரிக்கை.
🔮காஷ்மீரின் சியாச்சின் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி.
🔮18 ஆண்டுகள் கடின உழைப்பால் வீட்டின் மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானி: பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவிப்பு.

HEADLINES
India ready to sign Kartarpur Corridor agreement, asks Pakistan to consider waiving fee on pilgrims.
🔮Kerala rain: red alert issued for several districts on Monday, Tuesday.
🔮India vs South Africa third Test: Day 3 scorecard | SA collapse to 132/8 after following on.
🔮Livestock Census: Tamil Nadu has highest poultry population in country.
🔮World's highest battlefield Siachen now open for tourism, says Rajnath Singh.

No comments:
Post a Comment