காலைவழிபாட்டுச் செயல்பாடுகள்
21-10-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்
குறள்எண்- 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
மு.வ உரை:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
கருணாநிதி உரை:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும். அந்த உயர்வு கைகூடாவிட்டாலும், அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழிமற்றும்விளக்கம்
பழமொழிமற்றும்விளக்கம்
ஊரோடு ஒத்து வாழ்.
விளக்கம் :
ஊரோடு ஒத்து வாழ் என்றால் நீ வாழும் ஊர் சொந்த ஊராக இருந்தாலும் சரி வேறு ஊராக இருந்தாலும் சரி அதனை பொருட்படுத்தாமல் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1.House - வீடு
2.Hostel - விடுதி
3.Floor - தரை
4. Farm - பண்ணை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1.இராணுவ தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 15
2. மனித இதயம் எத்தனை அறைகளால் ஆனது?
நான்கு
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1.முகம் பார்த்து வளரும்; முடிவில்லாமல் தொடரும். அது என்ன?
சொந்தம்
2.திரி இல்லாத விளக்கு; உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?
சூரியன்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
புடலங்காய்
🍠 புடலங்காய் கொடிவகையான காய்கறி வகையைச் சேர்ந்த ஒரு வெப்ப மண்டலப் பயிராகும்.
🍠 வீட்டுத் தோட்டங்களில் தொங்கும் புடலங்காயின் தாயகம் இந்தியா. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோசன்தீன் ஆங்கினா என்பதாகும்.
🍠 இவற்றின் காய்கள் நீண்டு பச்சையாகத் தொங்கும்.
🍠 புடலங்காயில் கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்ப்புடல் என பலவகை உள்ளது.
🍠 பன்றிப்புடல் கொடியாக இருந்தாலும் நீளமாக இல்லாமல் குறைவாக இருக்கும்.
🍠 பேய்ப்புடல் மிகவும் கசப்பானது. அதனால் இதனை சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
இடம் கொடுத்து இறந்த சீலைப்பேன்
ஒரு ராஜா, அவர் பஞ்சணையில் மந்த விசர்ப்பணி என்னும் ஒரு சீலைப்பேன் நெடுநாளாக வாசம் செய்து கொண்டிருந்தது. ஒரு நாள் எப்படியோ ஒரு மூட்டுப்பூச்சி வந்து சேர்ந்தது. சீலைப்பேனுக்கு திக் கென்றது. நீ எங்கே வந்தாய்? போய்விடு என்றது சீலைப்பேன். ஏன்? ராஜாவின் பஞ்சணை உனக்கு மட்டும் தான் சொந்தமா? என்று திருப்பிக் கேட்டது மூட்டுப்பூச்சி. மகாராஜாவே மக்களுக்குச் சொந்தம். அவர் பஞ்சணை இதுக்கு மட்டும் சொந்தமா என்ன?
நீ பொல்லாதவன், முட்களைப் போன்ற பற்களினால் தூங்குவதற்கு முன்பே துடுக்காய்க் கடிப்பவன். சமயம் தெரியாதவனாதலால் ராஜாவின் படுக்கையில் இருக்கத்தக்கவனல்ல, இவ்விடம் விட்டுப் போய்விடு என்று பரபரத்தது சீலைப்பேன். ஆனால், கெட்டிக்கார மூட்டுப்பூச்சி சட்டென்று அதன் காலைப் பற்றிக்கொண்டு, நான் அப்படிச் செய்யவில்லை.
நீ சொன்னபடியே கேட்பேன் என்று கெஞ்சியது . இராஜரத்தம் கிடைப்பது லேசா? எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ, எனக்கு இப்போது இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. கெஞ்சுவதற்குத் தயங்கினால் அரசனது ரத்தம் தன் வயிற்றுக்கு உணவாகுமா? காலைப் பிடித்துவிட்டதால் கண்டிப்பாகப் பேச முடியவில்லை சீலைப்பேனால்.
சரி! நீ வெடுக்கென்று கடிக்கக் கூடாது. கடிக்க மாட்டேன். நித்திரை செய்யும்போதுதான் மெத்தென்று வலிதெரியாமால் மெல்லக் கடிக்க வேண்டும். அப்படியே செய்கிறேன். கொஞ்சமாகத்தான் ரத்தம் குடிக்க வேண்டும். கொஞ்சமே போதும். சரி அப்படியானால் இரு என்றது சீலைப்பேன்.
அப்போது அரசர் களைப்போடு வந்து பஞ்சணையில் அமர்ந்தார். இரவுப்பொழுது ஆதலால் உறங்குவதற்கு பத்து நிமிடம் ஆகி இருக்காது. மூட்டுப்பூச்சி நறுக்கென்று கடிக்க ராஜா திடுக்கென்று எழுந்துகொண்டார். சேவகர்களை அழைத்து ஏதோ கடித்தது பார் என்றார். சேவகர்கள் போர்வை உள்பட அனைத்தையும் கூர்மையாகச் சோதித்தார்கள். மூட்டுப்பூச்சி கட்டிலின் இடுக்கிலே ஓடி புகுந்து கொண்டது.
ஆனால் சீலைப்பேன் சிக்கிக்கொண்டது. போர்வையோடு ஒட்டியிருந்ததால் சேவகரின் பார்வையில் பட்டுவிட்டது. அடுத்த கணம், சீலைப்பேன் நசுக்கப்பட்டு இறந்தது. அந்தச் சீலைப்பேன், மூட்டுப்பூச்சிக்கு அடைக்கலம் கொடுத்தது அதற்கே ஆபத்தாய் முடிந்தது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮ஒழுக்கம், நீதிபோதனை போன்றவற்றை அறிந்தவனே முழுமையான மனிதனாவான் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.
🔮திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்.
🔮நிற்காமல் சளைக்காமல் வீசும் உன் பேரலைகள் 'முன்னேறுவதே வாழ்க்கை' கடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை!!
🔮தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை 497 ரன்களில் டிக்ளேர் செய்தது.ரோகித் இரட்டை சதம் விளாசல்.
🔮பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி....தளபதி பிபின் ராவத்-ராஜ்நாத் சிங் ஆலோசனை.
🔮இந்தியாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட திட்டம்: வாஷிங்டனில் நிர்மலா சீதாராமன் பேட்டி.
HEADLINES
China, India, 18 other countries will dominate global growth in 2024: IMF.
🔮Rohit Sharma hits double ton as India take command of Ranchi Test.
🔮28 Naxals surrender in Chhattisgarh's Dantewada.
🔮Script, mortar pestles of Pallava period found in Karur.
🔮People across the city were storing freshwater around their homes, creating ideal breeding grounds for dengue-carrying mosquitoes.
🔮AAI planning to monetise 759 acre of land near 8 major airports.
No comments:
Post a Comment