காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
12-10-2019
இன்றைய திருக்குறள்
குறள் எண்- 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
மு.வ உரை:
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
கருணாநிதி உரை:
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
கற்றுணர்தல், புதுமையை உருவாக்கும் புதிய படைப்புகள், ஆழ்ந்த சிந்தனைக்கு வழி வகுக்கும். சிந்தனைகள் அறிவு வளர்ச்சி அளிக்கும். செறிவார்ந்த அறிவு நம்மைச் சிறந்த மனிதனாக்கும்.
- அப்துல் கலாம்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும் .
விளக்கம் :
மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும் மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
Darning - இழையிட்டுத் தைத்தல்
Handkerchief -கைக்குட்டை
Silk - பட்டு
Gown - நீண்ட அங்கி
Long Skirt -பாவாடை
✍✍✍✍✍✍✍
பொது அறிவு
பொது அறிவு
1. மலேரியா நோய் கிருமியினால் முதலில் தாக்கப்படும் உறுப்பு எது?
கல்லீரல்
2.கடற்பாசியை உணவாக பயன்படுத்தும் நாடு எது?
சீனா
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. எத்தனை முறை சுற்றினாலும் தலை சுற்றாது . அது என்ன ?
பம்பரம், மின் விசிறி
2. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள்யார்?
பூட்டும் சாவியும்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!
சோளம்
🌾 சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த சிறிய தானியப் பயிராகும்.
🌾 சோளத்தில் பல வகைகள் உள்ளது. முற்காலத்தில் காட்டுச்சோளம் மற்றும் செஞ்சோளத்தை பயிர் விளைச்சலுக்கு பயன்படுத்தினர். தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக கலப்பின ரகச் சோளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
🌾 சோளத்தின் சில வகைகளை தானியங்களுக்காகவும், வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன.
🌾 சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை
இன்றைய கதை
வித்தியாசமான உதவி
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு யாராவது காப்பாற்றுங்கள் என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு நான் கீழே வந்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.
இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்? என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.
நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.
உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச் சுருக்கம்.
🔮மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி.
🔮வரலாற்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரத்தை தேர்வு செய்ததே பிரதமர் மோடி தான்: வெளியுறவுத்துறை தகவல்.
🔮மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்: தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் வரவேற்றார் பிரதமர் மோடி.
🔮விண்வெளியில் முதல்முதலாக நடந்த மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்ற அலெக்சி லியோனோவ்(85) ரஷியாவில் இன்று காலமானார்.
🔮காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும் நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது சமூக ஆர்வலர் சாண்டி பிரசாத் பட்டுக்கு வழங்கப்பட உள்ளது.
🔮உலக குத்துசண்டை போட்டி அரை இறுதிக்குள் இந்தியாவின் மேரி கோம் நுழைந்தார்.
🔮தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து விளாசினார்.
HEADLINES
🔮Veshti-clad Modi welcomes President Xi, turns guide at Mahabalipuram.
🔮Alexei Leonov, first man to walk in space, passes away at 85.
🔮Brain-dead student in Tamil Nadu gives new lease of life to nine.
🔮Boost for govt schools: 3,000 children join on Vijayadasami.
🔮India vs South Africa: Virat Kohli slams double ton as hosts declare first innings at 601.
No comments:
Post a Comment