காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
11-10-2019
இன்றைய திருக்குறள்
குறள் எண்- 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
மு.வ உரை:
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
கருணாநிதி உரை:
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
மாசற்ற நேர்மையான மனிதனால் மட்டுமே மனசாட்சி என்னும் கருவியை பயன்படுத்த முடியும்.
- அப்துல் கலாம்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
பழமொழி மற்றும் விளக்கம்
இளைத்தவனுக்கு எள்ளைக்கொடுஇ கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு
விளக்கம் :
எள்இ கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும்இ பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால்இ உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
Ledger- பேரேடு
Glue-கோந்து
Blank-paper-வெற்றுக் காகிதம்
Weekly Paper-வார இதழ்
Blotting Paper-மை ஒற்றுத்தாள்
✍✍✍✍✍✍✍
பொது அறிவு
பொது அறிவு
1மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் 10
2. பூமியின் விட்டம் எத்தனை கி.மீ ?
12756 கி.மீ
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1.உடம்பெல்லாம் சிவப்பு. அதன் குடுமி பச்சை. அது என்ன?
மிளகாய்
2. ஓயாமல் இரையும், இயந்திரமல்ல, உருண்டோடி வரும், பந்து அல்ல, அது என்ன?
கடல்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!
கம்பு
🌾 கம்பானது பச்சை மற்றும் வெண்மை கலந்த ஒரு புன்செய் நில சிறுதானியப் பயிராகும்.
🌾 பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
🌾 குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
🌾 இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில், கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது. கம்புப் பயிர் வறட்சியை தாங்கிக்கொண்டு வளரக்கூடியது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை
இன்றைய கதை
குருடரின் விளக்கு
ஒரு கிராமத்தில் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இரவு வேளையில் எப்போது வெளியே சென்றாலும் கையில் ஒரு விளக்கை எடுத்து செல்வது வழக்கம். இவர் அவ்வாறு ஒருமுறை வெளியே கையில் விளக்கோடு சென்றபோது, அவ்வழியாக வந்த வாலிபர்கள் சிலர் முதியவரை பார்த்தனர்.
முதியவரின் அருகே வந்த அவர்கள் மரியாதையின்றி, உனக்குத்தான் கண் தெரியாதே, பின் எதற்காக கையில் விளக்கை எடுத்து செல்கிறாய் என கேலி செய்து சிரித்தனர்.
வாலிபர்களின் கேள்விக்கு நிதானமாக பதில் அளித்த அந்த முதியவர். எனக்கு கண் தெரியாது என்பது உண்மை தான். ஆனால், இந்த விளக்கை நான் எனக்காக கொண்டு வரவில்லை. உங்களைபோல கண் நன்றாக தெரிந்தவர்கள் என் மீது மோதாமல் இருக்கத்தான் இந்த விளக்கு என்றார். முதியவரின் பதிலை கேட்ட வாலிபர்கள் தங்களது முட்டாள்தனமான செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச் சுருக்கம்.
🔮தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மயங்க் அகர்வால் 108 ரன்கள், விராட் கோலி 63 ரன்கள் குவிப்பு.
🔮இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019: போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு.
🔮150 ரெயில்கள், 50 ரெயில் நிலையங்களை தனியார்மயமாக்க சிறப்பு குழு அமைப்பு.
🔮2 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.
🔮சென்னைதமிழை கற்றுக் கொள்ள சீனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் : சீன ஊடகக்குழு தலைவர் கலைமகள் தமிழில் பேட்டி.
🔮கீழடியில் அகழாய்வு பணிகளை பொதுமக்கள் பார்வையிட அக். 13 வரை மட்டுமே அனுமதி: அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு.
HEADLINES
🔮Polish novelist Olga Tokarczuk and Austrian writer Peter Handke won the 2018 and 2019 Nobel Prizes for literature on October 10.
🔮Five meetings in two days: Here's the agenda for Modi-Xi summit at Mahabalipuram.
🔮Centre begins process to privatise 150 trains, 50 railway stations.
🔮Pune Test: Ton-up Mayank Agarwal, unbeaten Kohli lead India to 273/3 on Day 1 against South Africa.
🔮Boxing legend Mary Kom secures record eighth world medal, enters semifinals.
No comments:
Post a Comment