காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 12-03-2020 - T. தென்னரசு


காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள்
12-03-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள்எண்- 815

அதிகாரம் : தீ நட்பு

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 

 எய்தலின் எய்தாமை நன்று.

பொருள்:
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

எவர் எத்தகைய இனிமொழிகளை பேசிடினும் தம்பி, நீ கானம் பாடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும்.

 - அறிஞர் அண்ணா
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

உழுதவன்  கணக்குப்  பார்த்தால்  உழக்கேனும்  மிஞ்சாது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Cranium - மண்டை ஓடு
2. Colon - பெருங்குடல்
3. Cerebrum - பெரு மூளை
4. Cerebellum - சிறு மூளை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. கவிஞர் கண்ணதாசனின் மணிமண்டபம் எங்குள்ளது ?

 காரைக்குடி

2. திருமலை நாயக்கர் மஹால் எங்குள்ளது ?

 மதுரை

✡✡✡✡✡✡✡✡
Daily English
British English - American English
1. car - coach
2. cinema - movies
3. enquiry - inquiry
4. flat - apartment

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

முருங்கைக்காய்


பயன்கள்

🌽 ஞாபக மறதியைப் போக்கி, நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

🌽 முற்றிய முருங்கை விதைகளை காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி, பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமாகும்.

🌽 முருங்கை இலை காம்புகளை தனியாக காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.

🌽 முருங்கை வேரை பாலுடன் சேர்த்து அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும்.


🌽 நரம்பு தளர்ச்சிக்கு முருங்கை பூ ஒரு சிறந்த மருந்து.

🌽முருங்கைக்காய் சூப் எடுத்துக் கொண்டால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் குறைக்க உதவுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அழகிய ரோஜா செடி

அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.

அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காதா என்று கேட்டது. 


சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

🔮அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் 13 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

🔮பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 31-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

🔮32 அணிகள் பங்கேற்கும் மாநில கபடி போட்டி, சென்னையில் 11-03-2020 அன்று தொடங்கியது.

🔮எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியம் இல்லை: சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு 3% வட்டி....அதிரடி அறிவிப்பு.

🔮விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது: முதல்வர் பழனிசாமி உறுதி.


🔮மும்பையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி.

HEADLINES

🔮Coronavirus: Karnataka man’s death not confirmed as due to COVID-19, say officials.

🔮Heat is not a deterrent for transmission’: Your COVID-19 queries answered.

🔮State Bank of India cuts lending, deposit rates.


🔮Manish Kaushik wins intense box-off to make Olympic cut as Indian boxing records best qualifying show.

🔮Russian pranksters led Prince Harry to believe he spoke with Greta Thunberg: Report.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...