காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
02-03-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 592
அதிகாரம் : ஊக்கமுடமை
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
பொருள்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
நட்சத்திரங்களைக் காண இருள் தேவைப்படுகிறது.
- ஓஷோ
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
அந்தி மழை அழுதாலும் விடாது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
TOOLS - தொழிற்கருவிகள்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
ARTICLES
An Article which is used to refer to a particular person or thing is known as the Definite Article.
2. Indefinite Article:
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🐝தேனீக்கள் ஆறுகால்கள்(orthropods) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.
🐝இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன.
🐝அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
புறாவும், புழுவும்
ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப்புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. அதைக் கொத்தித் தின்ன விரும்பியது. அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது. புழுவின் இந்த செய்கை, புறாவிற்கு வியப்பைத் தந்தது. நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும். அசையாமல், என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே எப்படி என்றது புறா.
என் மனதிற்குள் நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது என்றது புழு. என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும் என புறாக் கேட்டது. உன்னைப் பார்த்ததும், உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன். நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா. உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே. சரி, உனக்கு ஒன்று சொல்கிறேன். வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா? அதே போன்று தானே. நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.
அது போலவே, அந்த வேடன் உன்னை விடுவித்தால், நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய். நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதுதானே நட்பின் இலக்கணம் என்றது. புறா, புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது. நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
🔮கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் ஒருவர் பலியாகி இருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
🔮2025க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
🔮மலேசிய நாட்டின் பிரதமராக முகைதீன் யாசின் நியமிக்கப்பட்டுள்ளார்.
🔮நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
🔮பல்கலைக்கழக தடகள போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் திருச்சி வீரர் கதிரவன் முதலிடம் பிடித்தார்.
HEADLINES
🔮HAL finalises plan to produce military helicopter on par with Boeing’s Apache Guardian.
🔮COVID-19: Iran reports 11 new virus deaths, taking total to 54.
🔮Sri Lankan President likely to dissolve Parliament paving way for snap polls.
🔮Fire breaks out in chemical godown in Madhavaram.
🔮Taliban starts diplomatic outreach after U.S. deal on Afghanistan.
🔮Govt aims at making India among top three world economies by 2025: Anurag Thakur.
No comments:
Post a Comment