காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 11-03-2020 - T.தென்னரசு


காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள்
11-03-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள்எண்696

அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில 

 வேண்டுப வேட்பச் சொலல்.

பொருள்:


ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

அழும் போது தனிமையில் அழு, 
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி, 
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், 
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

 - கண்ணதாசன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Sounds of Things - பொருள்களின் ஒலிகள்
1. Wave - ripple
2. Trains - rumble
3. Leaves - rustle
4. Watches - tick
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. அறிவியலுக்காக முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார் ?

 சர்.சி.வி.இராமன்

2. திருநெல்வேலி மாவட்டத்தில் கோரைப் பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர் எது ?

 பத்தமடை

✡✡✡✡✡✡✡✡
Daily English

BRITISH ENGLISH AND AMERICAN ENGLISH

1. biscuit - cookie
2. engine - motor
3. cotton - thread
4. cupboard - closet
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

சோளம்


சோளம் என்பது புல்வகையைச்  சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுள் சில  தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. 

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.


இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உண்டு.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்துக்கொண்டும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்திக் கொண்டும் மக்களுக்கு தொந்தரவுக் கொடுத்துக் கொண்டிருந்தது. இது மன்னருக்கு தெரிந்தும் மன்னர் கண்டு கொள்ளவில்லை.

இதனால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்று முல்லாவிடம் மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு முல்லா, மக்களிடம் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லா தான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து கஷ்டப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டுவிட்டனர். இத்தகவல் அறிந்த மன்னர் முல்லாவை வர வழைத்து உமக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னுடைய யானையைக் கட்டிப் போட்டிருப்பீர் என்று முல்லாவிடம் கேட்டார்.

மன்னர் பெருமானே! தங்களது யானை தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கச் சொல்லி எங்கள் ஊர் மக்களிடம் கேட்டது. நாங்கள் பெண் யானை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகத் தான் யானையைக் கட்டி வைத்திருந்தேன் என்றார்.

மன்னர், யானையாவது தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது? யாரிடம் நீ விளையாடுகிறாய்? என்று கேட்டார். மன்னர் பெருமானே! வேண்டுமானால் தாங்களே நேரில்வந்து தங்களின் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது பொய் என்றால் தாங்கள் கொடுக்கும் தண்டனை ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.

மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார். வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும், பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னர், தனது யானையால் தான் இந்த பேரழிவு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.

மன்னர் யானையினால் நடந்த சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். பிறகு அந்த யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடச் சொல்லி உத்திரவிட்டார். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முல்லாவுக்கு மனதார நன்றி தெரிவித்தார்கள். மன்னரும் முல்லாவின் அறிவைப் பாராட்டினார்.

நீதி :

நம்மால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பிற்கு தக்க சன்மானம் நிச்சயம் கொடுக்க வேண்டும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் பறக்கும் கார் குஜராத்தில் உருவாக உள்ளது.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைத்திருந்த ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

🔮இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

🔮பவுர்ணமியையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நிலவின் வெளிச்சத்தில் கடற்கரை கோவிலை கண்டு ரசித்தனர்.

🔮ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பன்ஹால், வீராங்கனை மேரிகோம் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

🔮3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்தது.


🔮கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினி, நுண்மக்கொல்லி திரவங்கள் தெளித்து, 3,400 அரசுப் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்.

HEADLINES

🔮Coronavirus,  Three more test positive in Pune, says official.

🔮Coronavirus | IAF C-17 returns from Iran with 58 Indians.

🔮OMCs cut petrol and diesel prices.

🔮Coronavirus: Theatres in Kerala to be shut down until March 16, film releases postponed.

🔮Indian mountaineer Bhawna Dehariya scales Australia’s highest mountain peak.

🔮Chicken sales decline by 35 per cent as government battles speculation on coronavirus.


🔮Olympic-bound Vikas enters final of Asian Qualifiers; Amit, Lovlina end with bronze medals.

No comments:

Post a Comment

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...